இலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கட்யின் தென்மாநிலப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தூர விலகி நிற்பதாக ஆத்திரமடைந்துள்ள தமிழ்நாட்டின் விசனத்தைத் தணிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி தனது சகாக்களுக்கும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
palli
அதை சின்னபசங்க நாம பாத்துக்கிறோம். பெரியவங்க நீங்க பார்க்க வேண்டிய சோலி பலது தேங்கிகிடக்கே அதை பார்க்காமல் இந்த சின்ன பொடிசுகள் செய்யும் விடயத்தை எட்டிபார்ப்பது நல்லாயில்லை ஆமா.
Kullan
சோனியா!. ஆடு நனைகிறது என்று ஓநாய் ஓவென்று அழுதமாதிரி இருக்கு. இதைத்தான் சொல்லுறது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது என்று. ஆயுதங்களையும் அரசுக்குக் கொடுத்துவிட்டு வரும் தேர்தலில் வோட்டுத்தேட நிவாரணம் திரட்டுகிறீர்களோ? ஏன் வோட்டுத் திரட்டுகிறோம் என்று உண்மையைச் சொல்லலாமே. திரட்டும் நிவாரணத்தை வடக்கே திரட்டலாமே. எதற்குத் தெற்கே? இலங்கை அரசாங்கத்துக்கு நிவாரணம் தேவைப்படுகிறதோ? இலங்கைத்தமிழனை வைத்து யார் யாரோ எல்லாம் பிழைக்கிறார்கள் அப்பா. பிச்சைக்காரனிடமே களவெக்கிறார்களே.