இம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் 11 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 8 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருவரும் என 21 முன்னாள் உறுப்பினர்கள் தோல்வியுற்றுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஐந்து பேரும் இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணியில் மூவரும் தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் யூ. எம். ஐயூப்கான் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.