அம்பாறை, இங்கினியாகல கிராமத்தில் புகுந்த புலிகள் அங்குள்ள பொதுமக்கள் அடங்கலாக 21 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து இங்கினியாகல பகுதியிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று கூறினார்.
கூடுதலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு மக்கள் தமது சொந்த இடங்களை விட்டும் வெளியேறத் தொட ங்கியதாக அறிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் கூடுதலான பொலிஸாரும் இராணு வத்தினரும் ஈடுபடுத்தப்பட் டுள்ளதோடு, சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மக்கள் மத்தியில் அச்சம் தனிந்து வருவ தாகவும் தப்பியோடிய புலிகளை தேடி பரந்தளவில் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கிலிருந்து தப்பிவரும் புலிகளே இவ்வாறு கிராமங்களில் புகுந்து அப்பாவி மக்களை கொலை செய்து வருவதாகவும், இதனைத்தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.