வடக்கு ரயில் பாதையை புனரமைக்க 400 கோடி ரூபா ஒதுக்கப்படும்

rail_track.jpgவவுனியா விலிருந்து பருத்தித்துறை வரையிலான ரயில் பாதையை புனரமைக்க 400 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் கலாநிதி லலிதசிறி குணருவான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில், வடக்கில் ரயில்; பாதையைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில் பாதைகளுக்கும்  அதனை அண்டியதாகவுள்ள கட்டிடங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது,

வடக்கு ரயில் பாதை புனரமைப்புக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சிலிப்பர் கட்டைகள் தயாரிக்கும் வேலைகளை துரிதப்படுத்த தற்போது நடவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *