அமெரிக்க மக்கள் மத்தியில் யேசு கிறிஸ்துவைவிட முக்கியமானதொரு இடம் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கிடைத்துள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 2 ஆயிரத்து 634 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
அதன்படி ஜனாதிபதி ஒபாமா முதலாம் இடத்திலும் யேசு கிறிஸ்து இரண்டாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து 4 ஆம் இடம் ரொனால்ட் றீகன், 5 ஆம் இடம் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், 6 ஆம் இடம் ஆபிரகாம் லிங்கன், 7 ஆம் இடம் ஜோன் மெக்கெய்ன், 8 ஆம் இடம் ஜோன் எப்.கென்னடி, 9 ஆம் இடம் செஸ்லி சுல்லென் பேர்கர் மற்றும் 10 ஆம் இடத்தில் அன்னை தெரேசாவும் உள்ளனர்.
2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே வாக்கெடுப்பில் யேசு கிறிஸ்து முதலாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் இரண்டாம் இடத்திலும் கொலின் பவல் மூன்றாம் இடத்திலும் கென்னடி 4 ஆம் இடத்திலும், அன்னை தெரேசா 5 ஆம் இடத்திலும், இருந்தனர்.
ஆனால் அந்த வாக்கெடுப்பில் 19 ஆம் இடத்திலிருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை 2001 ஆம் ஆண்டில் முதல் இருபது பேருக்குள் வராத மெக்கெய்ன் 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
thurai
மனிதனுள்ளேதான் இறைவனும் உள்ளார் என்பதை உலகமறியும் நாள் வெகுதூரத்திலில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
துரை
palli
ஆப்ஸ்தான்கானுக்கு ரானுவத்தை(17000) அனுப்பு முன்பு எடுக்கபட்ட கணக்கா அல்லது பின்பா??
வல்லரசுகளில் கூட முட்டள்பய பிள்ளைகள் இருக்கதான் செய்யுறாக.