அரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து சமூகத்தினையும் திருத்திப்படுத்துவதாக அமையும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (19.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்விற்காக புதிய அரசியல் அமைப்பொன்றினை கொண்டுவரப்போவதாக அமைச்சர் மைதிரிபாலசிறிசேன தெரிவித்து வருகின்றார். அவ்வாறு ஒன்று கொண்டுவரப்படும்போது அதனை எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினதும் பரிசீலணைக்கு விடப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.