இடம் பெயர்ந்து வந்துள்ள வன்னிப்பகுதி மக்கள் வவுனியாவில் தங்கியுள்ள நலன்புரிநிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குபவர்களுக்கு சில நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற, அளவு குறைந்த, பழுதடைந்த உணவு வகைகள் நலன்புரிநிலையங்களுக்கு விநியோகித்தால் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.
உணவுப்பொதிகளில் ஈரம் வெளியே கசியாதவாறு கடுதாசியினால் பொதியிடப்படவேண்டும். விநியோகத்திற்கு முன்னர் உணவுப் பார்சலுடன் கச்சேரிக்கு தினமும் குறித்த நேரத்தில் சமூகமளித்து பரிசோதனையின் பின்னரே அவை விநியோகத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்தப் பிரிவு கிராமசேவையாளருடைய சிபார்சுடனேயே உணவு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுகின்றது. காலை உணவாக கௌப்பி, பாண், நூடில்ஸ் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவுப் பொதி 250 கிராம் கொண்டதாகவும் மதிய உணவுப் பொதி (சோறு) 600 கிராம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது