தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் அடுத்த கட்டத்தில் உருவாகக்கூடும்- தமிழ்த் தேசிய பிரச்சினை எல்லை தாண்டிவிட்டது; சிறிதுங்க ஜயசூரிய

தமிழ்த் தேசியப் பிரச்சினை இப்போது எல்லைகளை தாண்டிச்சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் உருவாகும் பிரச்சினை அடுத்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படக்கூடும். இப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகத் தோற்றம் பெற்றுவருகிறது என்று ஐக்கிய சோசலிசக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிதுங்க ஜயசூரிய ஏ.என்.ஐ. செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லாத போது புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றி கொள்வது தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராது. அது பிரபாகரனையோ அல்லது புலிகளையோ வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ள சிறிதுங்க, தமிழர் பிரச்சினையை தமிழகத் தலைவர் நாடகத்தை அரங்கேற்றுவதாக விமர்சித்துள்ளார்.

பல வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கும் ஏனைய சர்வதேச அரசுகளுக்கும் அவர்கள் (தமிழகத் தலைவர்கள்) அழுத்தம் கொடுக்கின்றனர். இது அவர்களின் நாடகத்தின் ஓரங்கம் என்று தான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல்களை கண்டிப்பதால் யுத்தம் நின்று விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *