யாழ்.பல்கலை மாணவர்க்கு விமான டிக்கட்

risard.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ். பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டிய மாணவர் ஆறு பேருக்கு விமான பயணச் சீட்டுக்களும் கைச்செலவிற்கு பத்தாயிரம் ரூபா பணமும் மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்று வழங்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவற்றை வைபவ ரீதியாக மாணவர்களிடம் நேற்று வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கினார். வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் நலன்புரி நிலையங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சுகாதாரம், சமைத்த உணவு விநியோகம், குடிநீர், மின்சார வசதிகள் பற்றியவை மீளாய்வு செய்யப்பட்டது.

வவுனியா பிரதேசத்திற்குள் வந்தவர்கள் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை குடியமர்த்த செட்டிகுளத்தில் நான்கு மாதிரி நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. அது தொடர்பான வேலைத் திட்டங்கள் துரிதமாகவே நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர், அந்த பிரதேசத்திற்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்து வேலைத் திட்டங்களை அவதானித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • damilan
    damilan

    புலியாள துரத்தப்பட்ட மக்களால தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் புலியால கைவிப்பட்ட மக்களுக்கு உதவுற நிலமை 18 வருடத்திற்கு பின் ஏற்பட்டுள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழன் எல்லாம் காலத்தின் கோலம். புலிகள் இப்ப எலிகளாகி வளைக்குள் பதுங்குவதால் புலிகளை நம்பிய மக்கள் நடுத்தெருவில். அதனால் ஏற்கனவே புலிகளால் பாதிக்கப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுக்கு உதவுவதில் முன்னிற்கின்றார்.

    Reply