இலங்கை ஜனாதிபதி மாளிகையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில்பேசிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுடபத்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாராயணமூர்த்தியை இந்தப் புதிய பொறுப்பில் அமர்த்துவதாகவும், அதற்கான நியமனக் கடிதம் இந்த விழாவிலேயே தரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நாராயணமூர்த்தி ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹோனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிராமப்புற வேலைவாய்ப்பில் இந்தியாவின் மாடல் திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயலாக்கினோம் என்பது குறித்து தான் விளக்கியது ராஜபக்சேவுக்குப் பிடித்துவிட்டதால், அதை இலங்கையிலும் செயல்படுத்த விரும்புகிறார். அதற்காகவே என்னை இந்தப் பதவியில் நியமித்துள்ளார் என்றார் நாராயணமூர்த்தி.