தலவாக் கலை கிரேட்வெஸ்ட் தோட்டத்தில் ஆறுலயன் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் உயிர்ச்சேதமெதுவும் ஏற்படவில்லையெனவும் தோட்ட மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் தீ மேலும் லயன் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீடுகளின் கூரைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதுடன் இவ்வீடுகளில் குடியிருந்தோரை தோட்டக் கோயிலில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட 65 பேருக்கு சமைத்த உணவுகளை வழங்கவும் கிரேட் வெஸ்ட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.