சுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், அங்கிருந்து பெறப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இந்திய அரசாங்க அமைச்சர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இந்திய அரசாங்கமே இந்தப் பொருட்களை நேரில் ஏலத்தில் வாங்கி எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவுக்கான பார்வையை தமக்கு வழங்கிய கண்ணாடிகள் என்று காந்தியினால் விபரிக்கப்பட்டு, பின்னர் இந்திய இராணுவ அதிகாரி ஒருவருக்கு காந்தியினால் வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடியும் அதில் அடங்கும்.
காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரைத்தாங்கியிருந்த அவரது பேத்திக்கு வழங்கப்பட்ட கைக்கடிகாரமும் அதில் அடங்கும் இன்னுமொரு பொருளாகும்.