அநுராத புரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பொலிசார் சியாம்பலாகஸ்கட பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 5.15 மணியளவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மாங்குளத்தைச் சேர்ந்த அபுசாலி ஜாபிர் என்பவர் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரே அநுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி புதிய அலுவலகம் ஒன்றுக்கான திறப்பு விழா வைபங்கள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் ஜனக பெரேரா மற்றும் அவரது மனைவி உட்பட 23பேர் கொல்லபட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.