தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப். கேணல் செந்தோழன் மரண மடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஒளிப்படக் கலைப் போராளியும் பாடலாசிரியருமான லெப். கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன், தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறம்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார்.
இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அறுபதுக்கும் அதிகமான இசைப் பாடல்களைப் பாடியுள்ள இவர், தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.