இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் – ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து.

jaya.jpgஇலங் கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த ஆறு மாத கால மாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    ஜயோ ஜெயலலிதா இந்த பிறந்ததின விழாவை எல்லாம் அந்தபக்கத்து சசிகலாவுடன் வைத்து கொள்ளகூடாதா?? அம்மா(தப்புதான்) வாய் திறந்தாலே தங்களுக்கு மட்டும் எப்படி வரைஸாய் வருகிறது. இது சினிமாதுறையில் கத்துகிட்டதா?? அல்லது அடங்காத அரசியலில் பொறுக்கி எடுத்ததா? தாயே இந்த பாம்பு விளையாட்டெல்லாம் நாம் படையப்பாவில் பாத்தாச்சு. ஆகவே தங்களது விழாவை சத்தியா தோட்டத்தில் பாடுங்கள். எமக்கு சத்தமோ தமிழ்நாட்டுக்கு வெளிச்சமோ வராது. இம்முட்டுதான் ஆமா.

    Reply
  • santhanam
    santhanam

    மிகவும் கவனம் அ.தி.மு.க தான் உயிர்தந்தது அவரின் அரசியல் நிலைப்பாடு கருணாநிதிக்கு எதிரானது இவரின் ஆட்சியில்தான் எளிதான கடல் பயணம் மேற்கொள்ளமுடிந்தது.இப்ப முடியாது.

    Reply