இந்தியா வுக்கு எதிரான “ருவென்ரி20′ போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து கப்டன் மஹேல ஜெயவர்தன, சங்ககாரா நீக்கப்பட்டுள்ளனர். புதிய கப்டனாக திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரு “ருவென்ரி20′ போட்டி 10 ஆம் திகதி நடக்கவிருக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கப்டன் மஹேல ஜெயவர்தன, துணைக்கப்டன் சங்ககாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. புதிய கப்டனாக டில்ஷானும், கப்புகெதர துணைக் கப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முழங்கால் காயத்தால் கடந்த ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வந்த லசித்த மலிங்கா மீண்டும் “ருவென்ரி20′ அணியில் இடம்பெற்றுள்ளார்.