மீளக் குடியேற மறுப்பு தெரிவித்துள்ள 332 குடும்பங்களையும் , அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தனியாக சமர்ப்பிக்குமாறு மீளகுடியேற்ற அமைச்சின் திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ,செங்கலடி மற்றும் கிரான் பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த இக் குடும்பங்கள் மீண்டும் அப்பகுதிகளில் குடியேற மறுப்பு தெரிவித்ததை அடுத்தே அதற்கான காரணத்தை செங்கலடி கிரான் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார்.
இப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதும் மிகுதியான 332 குடும்பங்கள் மீள்குடியேற மறுத்துவருகின்றனர். இவர்கள் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தும் இவர்கள் மறுக்கின்ற காரணத்தால் இவ்விரு பிரதேசங்களிலும் பூரணமாக மீள்குடியேற்ற முடியாமல் உள்ளதாக திட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.