காங்கிரஸ் நகரச் செயலாளர் தீக்குளித்து மரணம்

ravichandran-1.jpgநாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார். நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.

உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.  மரணவாக்கு மூலத்திலும் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தாக கூறி உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kathir
    Kathir

    Tamil Nadu culprit politicians like Vaico, Thirumavalavan,Nedumaran and Ramadas,ect. are immediately arrested and must be charged by the Tamil Nadu Government for this offence.If they are reluctant to do this the Central Govt.immediately act to safeguard the people.
    I read the book “From Ganga to Valaga” which is written by the great communist and intellectual com.Ragula Sangrithiyan and he mentionend about this stupid action encouraged by the fools in his book.
    Those days the people who wants to go to the heaven were guided by the religious culprits to jump into the Ganga river and die to go directlly to the heaven.Now the same part have been played by the culprits politicians to cheat the poor people to gain some votes.It is a serious offence against the humanity.

    Reply
  • பராக்கிரமன்
    பராக்கிரமன்

    ஈழத்தமிழருக்காக தீக்குளித்ததாகக் கூறப்படும் சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது,

    என் பெயர் எஸ். ரவிச்சந்திரன்.
    தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம். என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..

    இலங்கை அரசே என் உயிர் தருகிறேன். போரை நிறுத்த வேண்டும்.

    Reply
  • palli
    palli

    ஆயிர கணக்கில் குழந்தைகள் உட்பட மக்கள் அழிவதை வேடிக்கை பார்த்துகொண்டு அதை நியாய படுத்தும் அரசுகளிடம் எம் உயிரை நாமே மாய்த்து கோரிக்கை விடுவதால் அவர்கள் மாறி விடுவார்களா என்ன?? ஆகவே தற்கொலைகளால் எதையும் சாதிக்க முடியாது. காரணம் உயிரை பற்றிய மதிப்பு ஆளும் வர்க்கத்துக்கு அறவேகிடையாது. எமது அனுதாபங்கள் மட்டும் அவர்களது இழப்புக்கு இடாகுமா?? நாம் அனைத்து அமைப்புகளாலும் எண்ணிக்கை இல்லாத போராளிகளையும்; மக்களையும் போராட்டம் என்னும் கடலில் மூழ்க விட்டு விட்டோம். ஆனாலும் இன்று எமது ஈழ போராட்டமே ஆரம்பத்தில் (1981)இருந்து தொடங்க வேண்டிய சூழல். இதுக்கு அரசுமட்டுமல்ல எம்மவர்களும் காரனம்தான். ஆகவே விளையாடிய விளையாட்டுகள் போதும். இனியாவது மக்களை நின்மதியாக சுவாசிக்க விடுவோம். தயவுசெய்து உயிர் தியாகங்களை நிறுத்துங்கள்.

    Reply