களனி பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 மாணவர்களும் 3 பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் 9 மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரஞ்சித் குணசேகர கூறினார்