வட பகுதி தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா செயற்படுகின்றாரா? என வட மாகாண கடற்றொழிலாளர்கள் இயக்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர நடைமுறை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பான முன்மொழிவை டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தமை தொடர்பில் வட மாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடல் தொழில் நிலையம் ஆகியன இணைந்து தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன. அந்தக்கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கே இவ்வாறான யோசனை உருவாகாத நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்கே அநீதி இழைக்கின்றார் என வட மாகாண கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.