மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் குறிப்பிட்ட திகதி களில் ஏற்றுக் கொள்ளப் படும். 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்பு நிறைவுபெறும். சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளரும் தலா 2000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.