அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 54 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
பிரேரணைக்கு ஆதரவாக 64 வாக்குகளும், பிரேணைக்கு எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.சபையிலிருந்த 10 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ. தே. க. சபையில் இருக்கவில்லை. ஜே. வி. பி. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி சபையில் இருக்கவில்லை