சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் . வருகிற பிப்ரவரி 26 ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக பிரணாப் முகர்ஜி வரும் 26ம் தேதி கொழும்பு வருகை தரவுள்ளார்.