ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளியேன் – ஜனாதிபதி

mahi-raja.jpg“ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். இப்படியான செயலுக்கு இற்றைவரை காரணமாக இருந்தவர்கள் விரைவில் கடலுக்குள் தூக்கிவிடுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதேநேரம்! “ஒரு இனம் இன்னொரு இனத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கவும் நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன் தினம் முஸ்லிம்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

தேர்தல்வரும் காலங்களில் எல்லாம் ஐ. தே. க. வினர் முஸ்லிம் மக்கள் தமது சமய கோட்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால் அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற கோசம் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்டதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவர்களது சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நான் நன்கு அறிந்து மதிப்பவன் என்ற வகையில் இவ்வாறு தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் உருவாக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த அனுபவம் எனக்குண்டு. அவர்கள் படும்துயரத்தையும் அண்மையில் நான் கண்டு அதற்கான எனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தேன். பலஸ்தீனத்தைப் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவத்தை எமக்கு இலகுவில் மறக்க முடியாது. பல்லாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு சொப்பிங்பேக்குடன் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வாழ்ந்தவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர். இவர்களை நாம் மீண்டும் அவர்கள் வாழ்ந்த சொந்த மண்ணுக்கு திருப்பி அனுப்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியதாகும். கிழக்கை நாங்கள் மீட்ட போது பல்லாண்டுகளாக அனைத்தின மக்களும் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்திக்காட்டினோம். இதனால் அங்கு இருக்கும் அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாக தமது மத வழிபாடுகளுக்குச் சென்று வர வழி செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. தே. க. தலைவர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நாற்பதாயிரம் முஸ்லிம்கள் புளிகளினால் மூதூரில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது நாம் அவர்களை நாற்பது நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த மண்ணில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினோம். இதன் பொருட்டு எம்மோடு உழைத்த அப்பிரதேசத்து அனைத்து முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்தோம்.

புலிகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெட்டப்பட்டும் கொத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிருக்காக இரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் எவ்வாறுதான் கல்வியைத் தொடர முடியும். மாற்றமாக இப்பிரதேசத்தில் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியதன் பொருட்டு இன்று சர்வதேச மட்டத்தில் பாராட்டக் கூடிய வகையில் கல்வியில் கிண்ணியா மாணவி ஒருவர் கலைப்பிரிவு பொதுப் பரீட்சையில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அரசாங்கம் அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஈரான் தேசத்தின் ஜனாதிபதி அஹமதி நிஜாத்துடன் நான் உரையாடிய வேளையில் எமக்கு நாட்டுக்குத் தேவையான பெற்றோலியத்தை வட்டியில்லாமல் 7 மாதங்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்திருந்தார். அன்று அத்தகையதோர் உதவி எமக்குக் கிடைக்காது போயிருந்தால் நாம் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டிருப்போம். இதே போன்று உமா ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணிக்க அந்தநாடு எமக்கு உதவி செய்ததையும், மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நாம் 60,000 மில்லியன் ரூபாவை நாங்கள் ஒதுக்கி இப்பொழுது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்தை அக்கட்சி கல்வி அமைச்சராக்கியது. இதன் ஊடாக முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய ஒரு பதவி வெற்றிடத்தை பெறுவதற்கு இப்பிரதேச மக்கள் தயாராக வேண்டும். கண்டி நகரில் முஸ்லிம் ஆண்களுக்கென சகல வளமும் கொண்ட ஆண்கள் பாடசாலையொன்றின் தேவையை நான் உணர்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இருக்கின்றார். இதற்கான அனைத்து பிரயத்தனங்களையும் அரசு மேற்கொள்ளும்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதே வேளையில் வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட்டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முல்லைத்தீவை மீட்டதும் அப்பிரதேச பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களை விரைவில் மாற்றிவிடுவோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    உன்மைதான் அவர்களது கற்ப்பு உயிர்கள் மட்டுமே சூறையாடப்படும். அதுவே இந்த அரசின் நிதானமான திட்டம். அதுக்காக எனது நாட்டில் உள்ள அனைத்தையும் அடகு வைக்க தயங்க மாட்டேன்..

    //வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட்டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். //

    அதனால் அவர்களையும் அவர்கள் உறவுகளையும் என் ராணுவமூலம் அழைத்து வந்து எனது ராசாங்க சிறையில் தல்கீழாக தொங்க விட்டு மறுவாழ்வு கொடுக்க முற்படுகிறேன். இது சங்கரி; டக்ளஸ்; கருனா இப்படி பல தமிழ் தலைவர்களுக்கு தெரியும். வேனுமென்றால் கேட்டு பாருங்கோ.

    Reply
  • பகீ
    பகீ

    பந்தி பந்தியாக கதை அளந்தாலும் கீழே சொல்லப்பட்டு உள்ளது தான் உண்மை!
    “This government says all the right things but they speak with forked tongues,” said a Western diplomat who is not authorized to speak on the record. “They just want the Tamils crushed and wiped out.”

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உங்கள் செயல்பாடுகளும் வார்த்தைகளும் பலநொந்து போனநெஞ்சங்ளை ஆசுவசப்படுத்தினாலும் சிறுபான்மை இனங்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கும் போது தான் உங்கள் நேர்மையும் ஊழியமும் முழுமை பெறும்.

    Reply
  • Thaksan
    Thaksan

    முதல் உங்களோட நிக்கிற ஆனந்தசங்கரிக்கும் டக்கிளக்கும் இடையில் இருக்கிற பிரச்சனையை தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்க. பிறகு தமிழரின்ர பிரச்சனையை பார்ப்பம். புத்தக பைக்குள்ள துவக்கு சுமக்கினம் எண்டு கவலைப்படுற உங்களுக்கு ஏணைத்தொட்டிலுக்குள் செல் விழுத்துறது தெரியாமல் போனது ஏனோ?

    Reply