புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

people-jaffna.jpgவன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ். குடாநாட்டு மக்கள் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். யாழ். குடாநாட்டின் 05 கல்வி வலயங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

யாழ். கச்சேரிக்கருகில் நேற்றுக் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியில் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், வர்த்தகர், மதகுருமார், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களென அனைத்து இன மக்களும் கலந்துகொண்டனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிப்படையவில்லை. வழமைபோல் கடைகள் யாவும் திறக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மூன்று மகஜர்களை கையளித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறு கோரி முதலாவது மகஜர் யாழ். அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று மக்கள் ஐ. நா. செயலாளரிடம் கையளிக்குமாறு கோரி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியிடம் இரண்டாவது மகஜரை கையளித்தனர். இறுதியாக இந்தியப் பிரதமரிடம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யு. என். டி. எச். ஆர். பிரதிநிதியிடம் மூன்றாவது மகஜர் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டோர், ‘அப்பாவி சிவிலியன்கள் விடுவிக்கப்பட வேண்டும்’, ‘சிவிலியன்களை விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • mutugan
    mutugan

    லண்டனில் நடந்ததற்கும் யாழ்ப்பாணத்தில் நடந்ததற்கும் தலை கீழ் வித்தியாசமாய் இருக்கிறது.

    Reply
  • Senthan
    Senthan

    லண்டனில் சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். யாழ்பாணத்திலோ டக்ளஸ் மிரட்டிச் சேர்த்த கூட்டம். அந்த சனம் உதுக்கு போயாவது உயிர் வாழுவமென்று நினைக்குது.

    Reply
  • mutugan
    mutugan

    லண்டனில் சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். யாழ்பாணத்திலோ டக்ளஸ் மிரட்டிச் சேர்த்த கூட்டம். அந்த சனம் உதுக்கு போயாவது உயிர் வாழுவமென்று நினைக்குது”

    அப்படியே என்றாலும் யார் அதை பழக்கிக் கொடுத்தது யார்?

    Reply
  • mutugan
    mutugan

    லண்டனில் தானாக சேர்ந்த கூட்டத்தால் ஏன் வன்னிக்கு போய் போராட முடியவில்லை?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தானாகசேர்ந்த கூட்டம் உயிர்வாழவேண்டுமென்று புலியை வளர்குது.

    Reply
  • Para
    Para

    Dear Comrades, The people who are particpated in an Anti LTTE procession in Jaffna and asked to free the people who are trapped by LTTE is a very important matter and it will be considered vrey much by the International community. It is an open fact that the Tiger terrorists are using the Vanni people as a human shield to safeguard them from the Srilankan army .The people all over the world must come out to free the people from the LTTE as early as possible. In the mean time all must asked the LTTE not to shell from the people .

    Jaffna bishop Rt.Rv.Dr.Thomas Soundaranayagam already asked the LTTE not to shell from the people or hide among the civilians. IN a letter sent to pesident on last monday bishop called on LTTE not to hide among the civilians. He is continuing, ” WE are urgentely requesting the Tamil Tigers not to station themselves among the people in the sfety zone and fire at the army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people.”

    Reply
  • Thaksan
    Thaksan

    வெருளாமலோ பொங்கு தமிழுக்கு சனஞ் சேர்ந்தது? சும்மா போங்கோ… சனத்துக்கு நல்லா தெரியும் எப்ப..யாரோட நிக்க வேணுமெண்டு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரித்தானியாவில் சேர்ந்த கூட்டம் தானாகச் சேர்ந்த கூட்டமோ?? யார் சொன்னது?? எத்தனை தொலைபேசி மிரட்டல்கள். அன்று நடக்கவிருந்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடப்பட்ட மிரட்டல்கள் என்று எத்தனையோ பட்டியலிடலாம். அதுமட்டுமல்ல ஏதோ பெயருக்குத் தான் தமிழர் பேரவை ஒழுங்கு செய்ததாகச் சொல்லப் பட்டதேயொழிய ஊர்வல ஒழுங்ககள் அனைத்தையும் செய்தவர்கள் புலிகளமைப்பினர். இன்று ஐரோப்பிய நாடுகளனைத்திலும் புலிகளமைப்பினரே பின்னாலிருந்து அனைத்தையும் இயக்குகின்றார்கள்.பின்பு எப்படி ஐரோப்பிய நாடுககளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் அனுதாபம் வரும்.

    Reply
  • thurai
    thurai

    டக்ளஸ் மாட்டில் பால் கறந்து குடிக்கிறார்.
    பிரபா மாட்டை கொன்று சாப்பிடுகிறார்.
    இவர்களால் இவர்களது குடும்பத்தினரும், உறவினர்கழுமே பயனடைகின்றனர். பாவம் ஈழத்தமிழர். பணத்தையும் கொடுத்து பாவத்தையும் சுமக்கின்றனர்.

    துரை

    Reply