தமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசித் தளமான முல்லைத்தீவு நகருக்குள் இன்று (ஜன:25) பிற்பகல் பிரிகேடிய நந்தன உடவத்த தலைமையிலான 59வது டிவிசன் படைப்பிரிவினர் உட்புகுந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நந்திக்கடல் ஏரி ஊடாக திடீர் தாக்குதல் நடத்திய 593வது பிரிகேட் படைப்பிரிவின் 7வது கெமுனு படைப்பிரிவினரே முல்லைத்தீவு நகருக்குள் உட்புகுந்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு நகரம் நந்திக்கடல் ஏரிக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நிலத்தொடராகும். 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமை கைபற்றி இதை அவர்களின் பிரதான தளமாக பாவித்து வந்தனர்.
1996ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவைக் கைப்பற்றியுள்ளது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினரின் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் இப்பகுதியை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்படும் என களவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை
இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி (sri lanka time -6.40 PM) விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவு நகர் சிறிலங்கா படையினரால் இன்று கைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் நேற்று முல்லைத்தீவு நகரை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13 வருடங்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் செய்தியை தொலைக்காட்சிகள் ஊடாக நேற்று மாலை அவர் தெரிவித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவு நகரை கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று (25) கைப்பற்றியுள்ளனர்.
இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.
முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.
புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.
இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும். அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.
முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.
முல்லைத்தீவைக் கைப்பற்றியமை தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டதாவது:-
இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் கட்ட ளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமை யிலான படையினர் தற்பொழுது முல்லைத்தீவு நகரு க்குள் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தை பாதுகாப்புப் படையினர் கடந்த 2ம் திகதி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றி 23 நாட் களில் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியமை படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும்.
593 படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த குணரத்ன தலைமையிலான படையினர் நந்திகண்டல் ஏரியை ஊடறுத்து திடீர் தாக்குதல்களை நடத்தயுள்ளனர். புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை வெற்றிகர மாக முறியடித்துக் கொண்டு 7வது கெமுனு படைய ணியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த லமாஹேவா தலைமையிலான படையினர் நகரை நேற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விசுவமடு நகரை நேற்று முன்தினம் கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் அங்கிருந்து தொடர்ந்தும் முன்னேறுவதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். முல்லைத்தீவை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் படையினரின் நடவடிக்கைகளுக்கு விமானப் படை விமானங்கள் நேற்றும் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
ello
புலி மகிந்தவிடம் கப்பம் வாங்கியதால் வந்த வினை. அனைத்தும் புலி தான் தேடி பெற்றது. …..
பார்த்திபன்
நேற்று கிளம்பிய பல்லாயிரக்கண்க்கான இராணுவம் பலி என்ற புரளியை நம்பி பலர் வெடிகள் கொழுத்தி கொண்டாடிப் போட்டினம். இப்ப அது முல்லைத்தீவுக்குள்ளை இராணுவம் நுழைந்ததிற்கு போட்ட வெடிகளாய் அல்லோ போச்சு. உதுக்குகுத் தான் சொல்லுறது முந்திரிகைக் கொட்டை மாதிரி எதற்கும் முந்தக் கூடாதென்று.
dot
ஆமி முல்லைத் தீவு பிரதேசத்தின் ஒரு பகுதியான முல்லை நகரையே கைப்பற்றி உள்ளதே தவிர முழு முல்லைத்தீவை அல்ல.
santhanam
காசை கொடுத்து யாழ்மக்களின் வாக்கரிமையை பறித்தபெருமை மகிந்தாவை சாரும். சொந்த இனத்திடம் கப்பம் பெற்று சிங்களவனிடமும் வேண்டி அடி வேண்டியபெருமை???
பார்த்திபன்
முல்லைத் தீவு நகர்ப்பகுதி முழுவதுமே இராணுவவசம் வந்துவிட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. இது ஏனைய ஊடகங்களிலும் வந்துள்ளது.
Thaksan
தண்ணியில கண்டம் பிரபாகரனுக்கு எண்ட சாத்திரம் மெய் தானோ?
santhanam
யார் சொன்னது முல்லைதீவை இராணுவம் பிடித்தது என்று அங்கு நாங்கள் எப்பவோ வெளியெறிவிட்டோம் இப்ப ஒன்றும் இல்லாத நகரை பிடித்துள்ளனர்.
palli
//நம்பி //
இதுதான் தமிழருக்கு சாபகேடு. இதுக்கு ஒரு சம்பவம் நினைவு வருகிறது. செட்டி செல்லகிளி இருவரும் சகோதரர்கள். பிரபா செட்டிக்கு மரண தண்டனை விதித்து (காரணம் பின்பு பார்ப்போம்) செல்லகிளியிடம் சொல்லியுள்ளார். அதை செல்லகிளி தாயிடம் செட்டிக்கு புலி அமைப்பு மரணதண்டனை கொடுத்து விட்டார்கள் என சொல்லியுள்ளார். அதுக்கு அவர் தாயார் அவனுக்கு(செட்டிக்கு) நேரில் தாக்கும் தகுதி உங்கள் அமைப்புக்கு (புலிக்கு) இல்லை ஆகவே எனது மகனை பின்னால் இருந்து தாக்கபோவதை ஒரு விடயமாக என்னிடம் சொல்லாதே என திட்டி செல்லகிளியை தாயார் அனுப்பினாராம். இதை ஏன் பல்லி இந்த சாமத்தில் சொல்லுகிறது என்பது பலருக்கு புரியும். என்னுமா நம்பிக்கை புலிமீது???
பல்லி.
தாமிரா மீனாஷி
இது அனைத்து தமிழ் பேசும் மக்களின் தன்மானத்திற்கு விழுந்த்த அடி. பெளத்த சிங்களம் தனது வெற்றியாகவே இதனைக் கருதுகிறது. அதேபோல் சில சிந்திக்கத் தெரியாத தமிழர்கள் இன்னமும் பெட்டிகள் திறக்கப்பட்டு தலைவர் ஒருபாடம் படிப்பிப்பார் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு செய்தி நம்பினால் நம்புங்கள்: அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முல்லைத்தீவு செய்தியை அறிவித்து விட்டு ஒலி பரப்பிய பாடல்: “எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!”
ello
புலி தமிழரை பணத்திற்கு பேரம் பேசியது தவறு. இது துரோகம். இது அவமானம். புலி லஞ்சம் வாங்கியது தவறு. இது துரோகம். இந்த வன்னி அவலம் புலியால் உருவாக்கியது. புலி பணத்துக்காக பிணமாக்கும் செயல்.
chandran.raja
பல்லி நீங்கள் தகவலை பிழையாக சொல்லுகிறீர்கள். செட்டிக்கு தண்டணை வழங்கியது குட்டிமணி அதாவது தமிழ்விடுதலை இயக்கம்.
அன்று செட்டியின் பிள்ளை பிறந்து முப்பத்தியெராவது நாள். கல்வியன்காட்டு சந்தையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்த செட்டியை ஓலைபையுடன் வந்த குட்டிமணி ஒருஅலுவல் கதைப்பதாக முன்ஒழுங்கையில் கூட்டிப்போய் போட்டுதள்ளினார். இதற்கு பிண்னனியில் கண்னாடி பத்மநாதன் சம்பந்தப்பட்ட காரணங்கள் இருந்தன.
செட்டி சாகும் வரை பிரபாகரனுடன் கொள்ளையடிக்கிறது போட்டுதள்ளுகிறதுவரை ஒற்றுமையாகவே செயல் பட்டார்கள். இதபற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள் விசாரித்துப் பாருங்கள். கொலை கொள்ளைகளை எமது அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் நோக்கத்துடன் இதை சொல்லவல்லை தகவல்கள் பிழையாக பதிவுசெய்யக்கூடாது என்ற ஆதங்கம் தான்.
padamman
எமது போராட்டம் ஒரு கோழையிடம் சென்றதை நாளை சரித்திரம் சொல்லும் நிச்சயம் சொல்லும்
palli
சந்திரன் ராஜா நான் சொன்னதில் எந்ததப்பும் இல்லை. நான் எங்கும் இதை படித்துவிட்டு சொல்லவில்லை. கொடிகாமம் பத்மநாதனை போட்டதென்னவோ செட்டிதான். ஆனால் எந்த காலத்திலும் செட்டி புலியை ஆதரிக்கவில்லை. அவர் ஆதரித்தது ரெலோவைதான். அந்த கால ரவுடிகளில் செட்டி மிக பிரபலியம். ஆகவே எனது தகவல் சரி. நேரம் வரும் போது விபரமாக எழுதலாம். பத்மனாதன் அந்த காலத்தில் மிக திறமையான தொழில் நுட்ப்பவாதி என்பது குறிப்பிடதக்கது. எனக்கு மேல்நாட்டு இம்ஸ்சங்கள் அவ்வளவு தெரியாது. ஆனால் நம் நாட்டில் நடந்த போட்டுதள்ளுதல் விபரம் பலதை சேகரித்து வைத்துள்ளேன். ஏனென்றால் இவர்களின் வீரமரபு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டாமா.
பிரபாகரன் ஒரு கோழை என்பதை அன்று செட்டியின் தாயார் சொன்னார். 27வருடத்துக்கு பின் பட்டம்மான் உன்மையில் பிரபா கோழைதான் என வழிமொழிகிறார். அன்று அந்த தாயின் சொல்லை செல்லகிளி கேட்டிருந்தால்……….??
மாற்றுகருத்துதோழர்
“சில சிந்திக்கத் தெரியாத தமிழர்கள் இன்னமும் பெட்டிகள் திறக்கப்பட்டு தலைவர் ஒருபாடம் படிப்பிப்பார் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.”
புலிகளின் கடந்தகால அசராத மீள் எழுகை 31 வருட களத்தில் நிற்கும் வலிமை. தளராத விலைபோகாத தலைமை மீதுள்ள நம்பிக்கைதான் இந்த எதிர்பார்ப்பை மக்களுக்கு தருகிறது. அதைவிட மூதூரிலிருந்து பின்வாங்க ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக புலி போராளிகள் பின்வாங்கி கொண்டே இருக்கிறார்கள் .அவர்கள் களத்தில் கண்டது சாவும் குருதியும் சிதைந்த தசைகளையும்தான். சாதரணமாக மனிதர்களுக்கு இவை மனச்சோர்வு விரக்தியைதான் தரும். ஆனால் எந்த நிலையிலும் எதிரியிடம் சரணடையாமல் தலைமையில் நம்பிக்கை வைத்து கட்டளைக்கு பணிந்து தளராத உறுதியுடன் போராளிகள் இருக்கும் போது. புலம்பெயர் ஆதரவாளர்கள் எப்படி நம்பிக்கை இழப்பார்கள். புலியின் தலைமையில் நம்பிக்கை இழந்து எல்லாமே போச்சு தோல்வி நிட்சயம் என விரக்தியுறுவதுதான் சிந்திக்க தெரிந்தவர்களின் அடையாளமென நீங்கள் நினைக்கலாம். அதற்காக அதுதான் உண்மையென்றில்லை.
“அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முல்லைத்தீவு செய்தியை அறிவித்து விட்டு ஒலி பரப்பிய பாடல்: “எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!””
அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் இந்த சிற்றுவேசனுக்கு “எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு…” என கீதாசாரம் சொல்லியிருக்கணுமா. இல்லை “வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…” என்ற வகையிலான பாடல் போட்டிருக்கணுமா! இல்லை மனதை பிசையும் ஒரு சோக இசையை ஒலிபரப்பி இருக்கணுமா!
தாமிரா மீனாஷி
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் உங்கள் தலைமை விலைபோகாமல் (அல்லது தேர்தல் காலங்களில் மட்டும் விலை போய்க்கொண்டு)அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் ரத்தமும் சதையுமாகக் கண்டு ஆனந்தக் கூத்தாடப் போகிறதோ அது உஙளுக்குத்தான் வெளிச்சம்..
த்மிழர் கூட்டணியும் இதே பாடலைப் போட்டுத்தான் சரித்திரமாகிப் போனவை. அதே வழியில் நாமும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட்த்தையும் சரித்திரமாக்கி விடுவோம்..
பாட்டுப் போடுவது கூடப் பரவாயில்லை. டக்ள்ஸ் தேவானந்தாவைக் கொலை செய்துவிட்டோம் என்று புரளியைக் கிளப்பிவிட்டு உங்கள் தோல்வியை மக்களிடம் மறைக்க முற்பட்டது சிந்திக்க தெரியாதவர்களின் கிரிமினல் புத்தியன்றி வேறென்ன?
palli
//ஒரு சோக இசையை ஒலிபரப்பி இருக்கணுமா//
இல்லை இல்லவே இல்லை. ஓடி விளையாடு பாப்பா ஒழிந்திருக்கல் ஆகாது பாப்பா என பாரதியார் வரிகளையாவது ஒலிக்க விட்டிருக்கலாம். சின்னபிள்ளைதனமாய் இல்லை தோழரின் பின்னோட்டம்.
santhanam
துரோகம் என்பது தமிழர்களின் வராலாறு செல்லகிளியும் தின்னவேலியில் மேல்மாடியில் வைத்து முதுகுக்கு பின்னால் சுடப்பட்டு நீர்வேலியில் தகனம் செய்யபட்டார்.
julian
பல்லி சந்திரன் ராஜா உங்களுடன் பல விடயங்களில் ஒத்துப் போகிறேன். ஆனால் செட்டி ரெலோவில் இருந்தவர் என்றோ ரெலோவின் ஆதரவாளனாகவோ இருக்கவில்லை.
செட்டி தொடர்ந்து பல கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தவர் அவரின் சில தாக்குதல்கள் இலங்கைப் பொலீசாருக்கு எதிராகவும் இருந்ததாக சிலர் கருதுவதுண்டு. அவர் என்ன செய்தாலும் அங்கே ஒரு கொள்ளையுடன் சம்பந்தப்பட்டே இருக்கும் எனவும் அறிந்ததுண்டு.
செட்டியின் காலத்தில் பலர் இயக்கம் கட்டுவதாக பல செயப்பாடுகள் இருந்தது அதில் செட்டியும் தனது பங்கிற்கு புதிய புலிகளை உருவாக்கினார் அதனுடன் பிரபாகரனும் செட்டியின் தம்பி செல்லக்கிளியும் இருந்தனர்.
செட்டி கொள்ளையடித்த காசுடனே பிரபாகரன் ரெலோவிற்கு மீள வந்தார். அப்படி வரும்போது தனக்கு செட்டியால் ஆபத்து என்று கூறிக் கொண்டே வந்து சேர்ந்தார்.
அப்போது பிரபாகரனை தங்கத்துரை ஏற்கவில்லை. பின்னர் பிரபாகரன் நஞ்சுப் போத்திலுடன் வந்து தான் சாகப் போகிறேன் என்று சொன்னபோதே குட்டிமணியின் சிபார்சில் பிரபாகரன் ரெலோவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் பிரபாகரனின் ஆய்கினை காரணமாகவே குட்டிமணி செட்டியை கொலை செய்தார். குட்டிமணி செட்டியை கொலை செய்யும் போது ரெலோவில் இருந்த பலருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அக்காலத்தில் குட்டிமணி செய்யும் போது மற்றவர்கள் ஓம் போட வேண்டியிருந்த நிலைமையையும் விளங்குவோம்.
ஆனால் செட்டியை கொலை செய்ய குட்டிமணி தவிரவேறு யாராலும் அது முடியாது என்ற அளவிற்கு செட்டி இருந்தார் என்பது இங்கே முக்கியமான விடயம். செட்டிக்கு சமமாக துணிந்து செயற்படக் கூடியவர் குட்டிமணி என்பதும் இங்கே முக்கியமான விடயம்.
இப்படி துணிந்து செயப்படக் கூடியவர்களை பிடிக்காதவராகவே பிரபாகரன் இருந்துள்ளார்.
செட்டிக்கும் பிரபாகரனுக்கும் யார் தலைவர்ஆவது என்பதில் பிரச்சினைகள் வளர்ந்தது என்றே நினைக்கிறேன்.
செட்டியின் கொலைக்கு தான் தானே ஆய்கினை கொடுத்து செய்வித்தது என்பதால் பிரபாகரனுக்கு செல்லக்கிளியில் ஒருவித பயம். அதனால் திருநெல்வேலி சம்பவத்தில் முதுகில் சுடப்பட்டார்.
palli
குட்டிமணி ஒரு ரவுடயல்ல. தவறான தகவல். அவர் அப்போதைய இலங்கை இந்திய கடத்தல்காரன். பிரபாவை விட குட்டிமணி நல்லவர் என்பது உன்மைதான். அவர் இவர்களுக்கு உதவ போய் அவரது குடும்பம் வஸ்த்தியாம்பிள்ளையால் சீரளிக்கபட்ட பின்னரே அவர் தங்கதுரையுடன் இனைந்தார்.
புதிய புலிகள் என்பது உமாவும் பிரபாவும் பிரிந்தவுடன் பிரபா தனக்கு தானே சூட்டிய பெயர். பின்பு உமா புளொட்என அறிவித்தவுடன் தமது பழய வி..புலிகள் என்பதையே நடைமுறைபடுத்தினர். இத்தனைக்கும் காரனம் கட்டுவான் நாகராசா. அவர் காணாமல் போய்விட்டார். சில காலத்துக்கு முன்பு அவரது நண்பர் ஒருவரிடம் அவர் பற்றி கேட்டபோது நாகராசா கனடாவில் இருப்பதாக சொன்னார். அது உன்மையா பொய்யா என பல்லிக்கு தெரியாது. ஆனால் நான் கேட்ட நபரும் நாகராசாவும் மிக நெருங்கிய நண்பர்கள். பல்லி சொல்லவதெல்லாம் சரிஎன்பது பல்லியின் வாதம்அல்ல. ஆனால் பல்லிக்கும் இவர்களுடன் பழக்கம் உண்டு. அதனால் பல்லிக்கு தெரிந்ததை புஸ்பராசாவின் எனது சாட்சியம் போல். பல்லியால் எழுத முடியாவிட்டாலும். தேசத்திலாவது எமக்கு தெரிந்ததை எழுதி சிலரது முகத்தை அம்பலபடுத்த முயல்கிறேன். ஆனால் நான் சொல்லுவதுதான் சரி என்னும் வாதம் என்னிடம் இல்லை. எனக்கு தெரிந்தது 10வீதம்தான் 90வீதம் இருட்டில் இருக்கிறது. அவையும் வெளிச்சத்துக்கு வர பல்லியின் பின்னோட்டங்கள் முன்னோடியாக இருக்கட்டுமே.
தொடரும் பல்லி..
padamman
செட்டி பல கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தவர் அது எல்லோருக்கும் தெரிந்த விடையம் அவர் கொள்ளையடித்த பணத்துடன் நவக்கிரி என்ற இடத்தில்தான் பதுங்கி இருப்பர் அப்போது அவருடன் கட்டையன ஒருவர் எப்போதும் இருப்பார்.அவர்களின் நோக்கம் கொள்ளையடித்தல் இந்தியாவுக்கு தப்பி செல்லுதல் இதை தவிர அவர்களிடம் எந்த நோக்கமும் இருந்தது இல்லை.
rajan
புதிய புலிகள் என்ற பெயரை சூட்டியவர் சுந்தரம் பல்லி
palli
உன்மைதான் பட்டம்மான்.
chandran.raja
யூலியான் உங்கள் தகவல்களுக்கு நன்றி. பல்லி நான் திருநெல்வேலியே எனது வதிவிடமாக இருந்தது. அன்நேரத்தில் நான் சீனக் கம்யூனிஸ்கட்சியின் ஆதரவளனாக இருந்ததாலும் போராட்டத்தில் எள்ளத்தனையும் சுயநலமல்லாமல் மக்களுக்கு அர்பணித்தல் என்ற சிந்தனை அடிக்கடி எமக்கு ஊட்டப்பட்டதாலும் மக்களுக்கு பயன்உள்ளவர்களாக இருப்பதை பற்றி எனக்கு தெளிவான விளக்கமிருந்தது. அதுநேரத்தில் எழபத்திஏழு இனக்கலவரம் நடத்தி முடிக்கப்பட்டவேலை. சலுசலா ஸ்தாபனம் உடைக்கப்பட்டு தெருவில் நின்றவர்கள் பொருள்களை அள்ளிக்கொண்டு போனகாலங்களிலேயே இன்றைக்கு நிலைநிற்கிற பயங்கரவாதம் அன்று உதயமாயிற்று. பலகுழுக்கள் தோற்றம் பெற்றார்கள். துணிகரமான செயல்களில் பரவலாக ஈடுபட்டார்கள்.
மினிவான் கடத்துகிறது. வங்கியை கொள்ளையடிக்கிறது. இதில் ஒருகூட்டம் முழுகொள்ளைக்காரர்கள் ஆகவே ஆகிவிட்டார்கள். இது நான் படித்த அனுபவம் அல்ல பார்த்த அனுபவம். குட்டிமணி காடையல்ல உள்ளுர் சண்டியன்.