இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மிக மோசமான ஊழல், மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டதாக அரச தரப்பு எம்.பி. அர்ஜுன ரணதுங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க, விளையாட்டு அமைச்சர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அர்ஜுன ரணதுங்க மேலும் கூறியதாவது;
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளேன். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மிக மோசமான ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது. நல்லவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். மோசடிக்காரர்கள் தான் தற்போது அங்குள்ளனர். இதனால், விளையாட்டுத்துறை சீரழிக்கப்படுகின்றது. எனவே தான் நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு நீதிமன்றத்தையே நான் நாட வேண்டியிருந்தது.