இலங்கை பிரச்சனைக்கு மதம், இனம் காரணம் அல்ல என்றும் அரசியல்தான் காரணம் என்றும் புத்தமத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே, புத்தமதம் வன்முறைக்கு எதிரான மதம் என்பதால் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவீர்களா என்று கேட்டீர்கள். எந்த இனமும் வன்முறையால் அழிக்கப்படக்கூடாது.
இலங்கைக்கு நான் பல வருடங்களுக்கு முன்பு செல்ல முயன்றேன். ஆனால் அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இலங்கை பிரச்சனை குறித்து அடுத்தகட்டமாக நோபல் பரிசு பெற்றவர்களை அழைத்து பேச உள்ளேன். இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் புத்தமதத்தை சார்ந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் அங்கு வன்முறை நடக்கிறது. இந்த நாடுகளில் மத ரீதியிலோ, இன ரீதியிலோ வன்முறை நடக்கவில்லை.
இலங்கை பிரச்சனைக்கு அரசியல் பின்னணிதான் காரணம். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், பவுத்தர்கள் வசிக்கிறார்கள். இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்படவேண்டும் என்றார்.