இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாத்தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதுடன் நேற்றைய தினம் முடிவடையும் போது நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனாத்தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்களிடையே அச்சமான சூழல் ஒன்று உருவாகி வருகின்ற நிலையில் “கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை“ என சுகாதார அமைச்சு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மினுவங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலைத் தொடர்ந்து, கொரோனா பரவலானது சமூகப் பரவலாக மாறயுள்ளதாக கூறப்படுவது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கொத்தணி பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.