முன்னாள் அமைச்சர் ரிஸாடபதியூதினை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பாக பல அரசியல்கட்சி சார்ந்தோரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தவண்ணமுள்ளனர். இந்நிலையில் “ ரிஷாட் பதியுதீன் ஆளும் தரப்பில் இருந்திருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(14.10.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர்,
பேருந்துகளை எடுத்த விதத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. முதல் சந்தர்ப்பத்தில் செயலாளர் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் பணத்தை அரசாங்கத்தினால் செலுத்திவிட்டு இரண்டாவது கட்டம் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமையான வாக்கை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளார். ஆனால் பணம் மீள செலுத்தப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.