பங்களாதேஷில் கற்பழிப்பு குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்ற முடிவை பங்களாதேஷ் அமைச்சரவை இன்று(12.10.2020) ஆமோதித்ததுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறினார்.
கற்பழிப்பு தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு என தனி சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கற்பழிப்புக்கு மரண தண்டனை வழங்கவும் விசாரணை தொடர்பான நடவடிக்கைகளை விளக்கவும் பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத் பங்களாதேச அமைச்சரவை கோரிக்கையின் பேரில் அவசர சட்டம் ஒன்றை வெளியிடுவார் என்று அனிசுல் ஹக் கூறினார்.
கற்பழிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி விரைவில் மரண தண்டனை வழங்குவதற்கு என்னென்ன சட்டங்களை திருத்த வேண்டும் என்பது குறித்த வரைவு மசோதா ஒன்றும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஹக் கூறினார்.
பங்களாதேஷில் அடுத்தடுத்து நடந்த கற்பழிப்பு குற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன அதனால் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது என ஹக் கூறினார்.