பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இலங்கைக்கான பிரதமரின் வர்த்தக தூதராக இவான் மேர்வின் டேவிஸ் பிரபுவை நியமித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் தனது வர்த்தக தூதர் திட்டத்திற்கு பதினைந்து புதிய நியமனங்களை செய்துள்ளார். இந்த புதிய நியமனங்களை அடுத்து பிரித்தானியாவின் 69 சந்தைகளுக்கான தூதுவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
டேவிஸ் பிரபு, 2009 – 2010ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் வர்த்தக, முதலீடு மற்றும் சிறு வணிக, உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.