இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நாணயத்தாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன்வினால் கையளிக்கப்பட்டுள்ளது.
விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளத்தில் வைத்து குறித்த நாணயத்தாள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.