பண்டைய காலத்தில் இருந்தததை போல றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மாகாணங்களை மையப்படுத்தி 3 மாகாண சபைகளை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து அரசாங்கம் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை பகல் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,
ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தததை போல றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என்று இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர முன்வைத்த யோசனை குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறது என்று குறிப்பிட்டார்.