கடந்த வெள்ளிக்கிழமை விமானப்படை தலைமையகத்தின் முன்பாக இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் விமானப் படைத்தளபதி ஏயார் சீவ் மார்ஷல் றொசான் குணத் திலகவை இலக்கு வைத்தே நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் , சம்பவ நேரம் விமானப் படைத்தளபதி விமானப்படைத்தலைமையகத்துக்கு வரவில்லை எனவும், அவர் தனது தங்குமிடத்துக்குச் சென்று விட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியை படையினர் மீட்ட வெற்றி நாள் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அதில் விமானப் படைத்தளபதியும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வு முடிந்த பின்னர் விமானப்படைத்தளபதி விமானத் தலைமையகத்துக்கு வருவார் என்று எண்ணி தற்கொலைக்குண்டுதாரி இருந்துள்ளார். ஆனால் , விமானப்படைத்தளபதி ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வுகள் முடிவுற்றதும் நேரடியாகவே தனது இருப்பிடத்துக்கு சென்றுள்ளார். இதனால் அவர் இத்தாக்குதலில் சிக்காமல் தப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.