வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபர்கள் தொடர்பான கணக்கெப்பு நேற்று இடம்பெற்றது. மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற இந்த கணக் கெடுப்பில் பெருந்தொகையானோர் பங்குகொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே நேற்றைய கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்தந்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது தகவல்களை வழங்கிய துடன் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டிருந்தன. கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வந்த மக்கள் எவ்வித தங்கு தடைகளும், தாமதங்களுமின்றி பதிவு செய்ய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.