தமிழ் கட்சிகளின் அரங்கமும், கூட்டமைப்பும் இணந்து அமைத்துள்ள குழு மார்ச் மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து நியமித்த அறுவர் கொண்ட குழு எதிர்வரும் மார்ச் மாதம் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலுமிருந்து நியமிக்கப்பட்ட இக்குழுவினர் தீர்வுத்திட்டம் ஒன்றை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும், மலையக கட்சிகளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்வது குறித்து ஆராயவேண்டியுள்ளதாலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தற்போது சுகவீனமுற்றிருப்பதாலும் எதிர்வரும் மார்ச் மாதத்திலேயே தீர்வுத்திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ் கட்சிகளின் அரங்கப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்காக கடந்த 12ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கமும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இரு தரப்பிலுமாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    :://தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து நியமித்த அறுவர் கொண்ட குழு எதிர்வரும் மார்ச் மாதம் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலுமிருந்து நியமிக்கப்பட்ட இக்குழுவினர் தீர்வுத்திட்டம் ஒன்றை ஆராய்ந்து //
    அதுவரையும் இவர்கள் பிரியாமல் இருக்க ஒரு குழு அமைத்து அதில் சிலரை இவர்களை பாதுகாக்க விட்டால் நல்லது; சிவாஜிலிங்கத்துக்கும் பிரேமசந்திரனுக்கும் இதுவே பட (அரசியல்) பஸ்; இதைவிட்டால்… வேண்டாம் பல்லியின் வாக்கு பலிப்பதாய் பலர் அங்கலாய்க்கிறார்களாம்;

    Reply