தேசம்நெற் இன் நல்லதொரு நண்பன் தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதன் பேரின்பநாதன் காலமானார்!

Perinpanathan_EROSஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.

இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.

தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • T Constantine
    T Constantine

    My heartfelt condolences. I knew Mr Peri over last 25 years and he was always consistent in his thoughts and very humble person. He will be greatly missed.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    my deepest condolence to the demised Mr. Parinpanathan. I have seen and spoken to him several occasions. He was a nice gentleman. May God bless his soul and soothe the sorrow and pain the family and the friends go through. Goodbye PARIN.

    Reply
  • பல்லி
    பல்லி

    இவரது அரசியல் சமூக சேவை நட்பு பற்றி கேள்விபட்டுள்ளேன்; ஆனால் அவருடன் பளகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை; இருந்த போதும் தமிழ் சமூகம் பற்றிய ஒரு சிந்தனையாளன் எம்மை விட்டு பிரிந்த தகவல் கடினமானதே; அவரது இழப்பால் துயர் உறும் அவர் குடும்பம்; நண்பர்கள், அமைபாளர்கள்; அன்பர்கள் அனைவருக்கும் பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்; அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறோம்;

    பல்லி குடும்பம்;

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தோழர் பேரி அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
    தோழர் பேரி எம்முடன் தேசம் மற்றும் பொது விடயங்களில் இணைந்து வேலை செய்தவர். பலதரப்பட்ட சமூகத்தில் உள்ள முரண்பாடானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் தன்மையும், முரண்பாடானவர்களுடன் இணைந்து வேலைசெய்ய மற்றவர்களை ஊக்குவிப்பும் செய்பவர்.

    எம்முடன் பல தரப்பட்ட செயற்பாடுகளுக்கு முன்னிலையிலும் மறைமுகமாகவும் இணைந்து செயற்பட்டதில் தோழர் பேரியின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும்.

    அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    நெருனல் உளன் ஒருவன் இன்று இலை எனும் பெருமை படைத்தது இவ்வுலகு எனினும் எல்லோருக்கும் நண்பனாயும் தோழனாயும் வாழ்ந்த அவர் மறைந்து விட்டார் என்பது உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்ச்சியைத் தந்தது. அவர் வெகு விரைவில் எம்மைப் பிரிந்த்து விடுவார் என்ற சிறு எண்ணத்தைக் கூட அவரது தோற்றமோ அன்றி அவரது சுறுசுறுப்பான சுபாவமோ தரவில்லை. அவரைப் பொறுத்த வரையில் மரணம் நம் அனைவரையும் ஏமாற்றி விட்டது என்றுதான் கூற வேண்டும். தனது இனத்துக்கு எது நன்மை பயக்கும் என்பதில் அவருக்கு துளியும் சந்தேகம் இருந்தது கிடையாது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு மாமனிதர் அவர்.

    கண்ணீருடன் விடைதருகிறோம் தோழனே!

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    யாழ் இந்து பழைய மாணவன் என்றமுறையில் “கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்க்கு தக” என்பதை நிரூபித்த அமரர் அவர்களுக்கு மானிடன் எனது இதயஅஞ்சலிகள்!

    Reply
  • மேளம்
    மேளம்

    பேரின்பநாதன் மறைவிற்கு மேளம் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். தோழர் பேரி அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.
    மேளம் குடும்பம்.

    Reply
  • nanee
    nanee

    இவர் எனது அத்தானின் மிக நெருங்கிய நண்பர். இன்று காலைதான் செய்தி அறிந்தேன். நான் லண்டனில் இருக்கும் போது அடிக்கடி சந்திக்கும் நபர்களில் இவரும் ஒருவர். பேரி அண்ணையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பேரின்பநாதன் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். அன்னாரது உற்றார் – உறவினர்கள் – நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply