பருத்தித்துறை வீதி அகலிக்கப்படவுள்ள நிலையில் அவ்வீதியிலுள்ள சங்கிலியன் சிலை அகற்றப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
சங்கிலியன் சிலை வீதி அகலிப்பின்போது அகற்றப்படலாம் என்கிற கவலை அப்பகுதி மக்களுக்கும் மற்றும் கலாசார உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சிலை அகற்றப்படமாட்டாது எனவும், அதற்கு மாற்று எற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வீதி அகலிப்பு பணிகளின் போது கலாசார சின்னங்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.