யாழ். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்களிடம் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்குமானால் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அக்காணிகளில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கு குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவது குறித்து வீடமைப்பு அதிகார சபையினர் தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போது அமைச்சர் அதில் கலந்து கொண்டு திரும்புகையில் ஊடகங்கள் நாவற்குழி குடியேற்றம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை குறித்து வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசாங்க அதிபர் என்ற முறையில் தான் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
Rohan
//யாழ்.நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்களிடம் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்குமானால் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அக்காணிகளில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். //
இதுவல்லவோ மகிந்த சிந்தனையின் வெளிப்பாடு. சொந்த நிலங்களிலிருந்து பல ஆண்டுகளாக விலக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களுடன் காத்திருக்கிறார்கள்.
அது சரி – அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களைக் காட்ட அமைச்சர் எத்தனை நாள் அவகாசம் தந்திருக்கிறார்? அதையும் 24 மணிநேரத்தில் காட்டுமாறு கேட்கலாமே! உடனடியாகக் காட்டத் தவறுமிடத்து இவர்களைத் தூக்கி வீச அமைச்சருக்கு தில் இருக்கிறதா?