யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் அண்மைக் காலமாக சுமார் ஐந்து பேர் வரையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவதாகவும், யாழ்.குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் யாழ்.பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் அதிகரித்து காணப்பட்ட டெங்கு நோய்த் தாக்கம் இரு மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நோய் தற்போது மீண்டும் அதிகரிக்கும் நிலை எற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் மக்கள் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் டெங்கு நோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.