பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்களாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் அதிகளவு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்கள் ஆகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளான வேம்படுகேணி, இத்தாவில், முகமாலை, கிளாலி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உயர்பாதுகாப்புவலய பிரச்சினை எதுவும் இல்லை எனவும், அதிகமான மிதிவெடிகள் இப்பகுதியில் காணப்படுவதே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கும் படைப்பிரிவினரால் அங்குளம் அங்குளமாக துப்புரவாக்கப்பட்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.