மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார் 25 குடும்பங்களின் குடியிருப்புக்கள், நெசவு நிலைய கட்டடம், கிராம அபிவிருத்திச்சங்க கட்டடம் முதலானவற்றில் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்தனர். தற்போது மட்டக்களப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் அவ்விடங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதயில் முன்னர் வாழ்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புக்களை துப்புரவு செய்து மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.