பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் 24 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார். கொழும்பு மறைமாவட்ட ஆயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருக்கு இரண்டாம் இடத்தை வகிக்கும் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளார். 16 ஆவது பரிசுத்தப் பாப்பரசரினால் வத்திக்கானில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.45 மணியளவில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா,லத்தீன் அமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்காவுக்கான முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் கர்தினால்களில் அதிக எண்ணிக்கையானோர் இத்தாலியர்களாகும். 2 அமெரிக்கர்களும் இதில் அடங்கியுள்ளனர். புதிய கர்தினால்களில் வாஷிங்டன் டி.சி.யின் பேராயர் டொனால்ட் வூர்ல்,பேராயர் ஜேமன்ட் பர்க் ஆகியோர் அமெரிக்கர்களாவர். பேராயர் ரேமன்ட் பேர்க் வத்திக்கான் நீதிமன்றுக்கு தலைமை தாங்குகிறார். கருச்சிதைவுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் கட்சியை இவர் கடுமையாக விமர்சிப்பவராவார். இந்த அறிவிப்பை பாப்பரசர் புதன்கிழமை விடுத்திருக்கிறார். வார்சோ, மூளிக், கின்சாசா, குயிற்றோ, லூசாக்கா, சம்பியா, இலங்கை ஆகியவற்றுக்கு புதிய கர்தினால்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.