இலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். செப்ரம்பர் 17 இல் இடம்பெற்ற ஆண்டுக் கூட்டத்தில் லிற்றில் எய்ட் உறுப்பினர்கள் இவரை ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.
உதவித் திட்டங்கள்
மே 18 2009 ல் பிரித்தாகனிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் இதுவரை 20க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. தமிழ் அமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவர்கள் இந்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தனர்.
லண்டன் அகிலன் பவுண்டேசன், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், தேசம், தீவக மேம்பாட்டு சமூகம் ஆகிய தமிழ் அமைப்புகள் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மனித நேயத் திட்டங்களை முன்னெடுக்கின்றன.
Medicine Without Border, Global Medical Aid, Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவிகளை மேற்கொள்கின்றன. Medicine Without Border, Global Medical Aid ஆகியவற்றின் உதவியுடன் லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் பவுண்ட் பெறுமதியான மருத்துவ உதவிகளைப் (பெரும்பாலும் மருந்துப் பொருட்கள்) பெற்று பெரும்பாலும் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவ மனைகளுக்கு விநியோகித்தது. அரசுசாரா நிறுவம் ஒன்று இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களை இலங்கையில் பெற்று விநியோகித்தது இதுவே முதற் தடவையாகும்.
எதிர்காலம்
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் ஆரம்ப காலங்களில் முகாம்களில் இருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை மேற்கொண்டது. மரக்கறி வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகளை வழங்கியது.
மேற்கொண்டு இடைக்கால நீண்டகாலத் திட்டங்களையே லிற்றில் எய்ட் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, ஆங்கலக் கல்விக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் திட்டமிட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புக் அப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 20 வரையான கணணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவையும் இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்படும். லிற்றில் எய்ட்க்கு முதலாவது காசோலையை வழங்கிய எம் சூரியசேகரம் லண்டனில் இருந்து யாழ் சென்று மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கு வழக்கு
புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புகளில் லிற்றில் எய்ட் அமைப்பு தனது கணக்கு கோவைகளை திறந்ததாகவும் வெளிப்படையாகவும் வைத்தள்ளது.
www.littleaid.org.uk என்ற இணையத்தளத்தில் கணக்கு வழக்குகளைப் பார்வையிட முடியும். இது ஏனைய அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ரஸ்டிகள் – உறுப்பினர்கள்
லிற்றில் எய்ட் இன் தலைவி: டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை, செயளாயினி: சர்மிளா பெர்னான்டோ. பொறுப்பான இரு பதிவிகளையும் பெண்களே வகிக்கின்றனர். தனாதிகாரி: சிறில் அல்பிரட், திட்ட இணைப்பாளர்கள்: சண் ராசையா, நிஸ்தார் மொகமட், ஜெயபாலன் தம்பிராஜா, ரரின் கொன்ஸ்ரன்ரைன். இவர்கள் இலங்கையின் பல்கலாச்சாரத்தன்மையை பிரதிபலிக்கும் வைகயில் அமையப் பெற்றுள்ளனர்.
‘ரஸ்டிஸ் வீக்’ இணையச் சஞ்சிகை லிற்றில் எய்ட் தலைவி மரினி மனுவேற்பிள்ளையை ஒரு வாரத்திற்கான ரஸ்டியாக தெரிந்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:
தற்போது இலங்கை சென்றுள்ள ரிற்றில் எயட் திட்ட இணைப்பாளர்களில் ஒருவரான ரி கொன்ஸ்ரன்ரைன் அங்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். அவை பற்றிய விபரம் பின்னர் பதிவிடப்படும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:
பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு
இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
palli
//இலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்//
வாழ்த்துக்களும் பாராட்டும் பலருக்கும் பல பதவிகளுக்கும் முன்னுதாரணமாய் செயல்படுவீர்கள் என நம்புகிறோம்;
உங்கள் செயல்திட்டங்களுக்காக மட்டும் பதவியை பயன்படுத்துங்கள், பதவிக்காய் உங்கள் செயல்; சேவைகளை செய்யாதீர்கள்;
நட்புடன் பல்லி;
அஜீவன்
லிட்டில் எயிட் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துகள்.
மனிதநேய பணி தொடரட்டும்…..