நோயாளர் களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கத் தவறும் மருத்துவ மையங்கள் மீது பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு என்எச்எஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தரமான சுகாதார சேவையை வழங்கத் தவறுபவர்களில் ஆங்காங்கே தமிழ் மருத்துவ மையங்களும் தமிழ் மருத்துவர்களும் சிக்கி உள்ளனர். இவர்களில் சிலரின் மீதான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது.
வடக்கு லண்டன் கலோடோனியன் றோட்டில் பல்வைத்திய நிலையத்தை நடாத்தி வந்த கைலாசம் பஞ்சநாதன் மீது விதிக்கப்பட்ட இடைக்காலக் கட்டுப்பாடுகளை Islington Primary Care Trust தற்போது நீக்கி உள்ளது.
2008 ஒக்ரோபரில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு செய்முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாக கைலாசம் பஞ்சநாதன் மீது குற்;றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு General Dental Councilக்கு முறைப்பாடுகள் சென்றன. 2009 நவம்பரில் கைலாசம் பஞ்சநாதனின் பல்வைத்தியநிலையம் சோதணைக்கு உள்ளானது. தொற்றுநோய் கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்கு கவனிக்கப்பட வேண்டிய 9 விடயங்களிலும் கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் தவறி இருந்ததை அச்கோதனை தெரியப்படுத்தியது. ஏப்ரல் 2009ல் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் பதிவு பற்றிய ஓடிற்றில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஆனால் தனது தவறை உடனடியாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட கைலாசம் பஞ்சநாதன் தான் தொழில் செய்வதை இடைநிறுத்த முன்வந்ததுடன் தொழில்தர ஆலோசனையைப் பெற்று வைத்திய நிலையத்தின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணைக் குழு தெரிவித்து உள்ளது.
2009 யூனில் சுயாதீன அமைப்பினு+டாக கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் மீளவும் சோதணைக்கு உட்படுத்தபக்பட்டது. தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு இருக்க வேண்டிய 9 விடயங்களும் இம்முறை தரமுடையதாக இருந்தது.
கைலாசம் பஞ்சநாதன் தொடர்ந்தம் தரத்தை உயத்தி வருவதில் திருப்தி அடைந்த விசாரணைக் குழு அவர் பாதிக்கப்பட்ட விடயங்களில் தரத்தினை உயர்த்தி உள்ளதை ஆதாரபூர்வமாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரால் தரமான சேவைகளை வழங்க முடியும் என்பதை அக்குழு ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து அவர் தொழிலை மேற்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.