ஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.
( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )
‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.
ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.
நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.
தாமிரா மீனாஷி
//‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ //
இந்த வாக்கியங்களின் மூலம் ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? ஈழம், புத்தர்,சிங்களம் என வெற்று வார்த்தைகளை வைத்து பிழைப்பதை யமுனா ராஜேந்திரனும் அவரது புலிப் பினாமி கூட்டாளிகளும் இனியாவது நிறுத்திக் கொள்ள மாட்டார்களா? இந்திய இராணுவம் இரகசியமாக முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை வேட்டையாடியபோது தனது தேசபக்தியின் உச்ச நிலையாக மெளனம் காத்தவர் ராஜேந்திரன்.. உங்கள் ஊரில் நீங்கள் அக்கறைப் படும்படியாக எந்தப் பிரச்சனையும் இல்லையா ராஜேந்திரன்? ஈழத்தமிழர்களை சொந்த வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தியதை இனிமேலாவது நிறுத்துங்கள்.. எதையாவது எழுத்து என்ற பெயரில் எழுதி புலிப் பினாமிகளின் நிதி சேகரிப்புக்கு துணை போய் உங்களுக்கும் ஏதாவது கையூட்டு வாங்கிக் கொள்வதற்கு ஈழத்தமிழரைப் பற்றி நீங்கள் எழுதியது போதும். உங்களுக்கு ஈழ்த்தமிழரைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் ஈழத்தில் வாழ்ந்தீர்களா? அல்லது அவர்களது வாழிடஙளுக்கு ஒருமுறையாவது போய் வந்தீர்களா? தயவு செய்து இனிமேலாவது இதை நிறுத்துங்கள்.. எழில் சகோதரர்கள் ஈழத்தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தியது உங்களுக்கும் கண்ணில் பட்டுவிட்டதால் நீங்களும் புலி வாலைப் பிடித்து தொங்கலாம் என விருப்பம் கொண்டு விட்டீர்கள்..தயவு செய்து நிறுத்துங்கள்..
மாயா
தாமிரா மீனாஷி அவர்களது கருத்தே எனது கருத்தாகவும் உள்ளது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதுவதை விடுத்து > வேறு ஏதாவது உருப்படியாக செய்தால் அதுவே உலகத்துக்கு செய்யும் நன்மை. தலைப்பே தலையை சுற்ற வைக்கிறது. யமுனா ராஜேந்திரனால் இப்போது இலங்கை செல்ல முடியும்? ஒருமுறை வந்து விட்டு எழுதுங்கள். நிலத்தில் இருந்து நிலாவில் முயல் இருக்கிறது போன்ற அம்புலிமாமா கதைகளை எழுத வேண்டாம். இவை காசைத் தரும் ; சமூகத்துக்கு ஒன்றையும் தராது.
Jeyabalan T
//முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது.//
உண்மையிலேயே இந்தக் கருத்துக்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாக நான் அறியவில்லை. மேற்படி படைப்புகளும் படைப்பாளர்களும் தமிழ் பகுதிகளில் இருக்கவில்லை. தோண்றியிருந்தாலும் அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு இருக்கும் என்பது தான் உண்மை. புதியதோர் உலகம் முறிந்தபனை சொல்லாத சேதிகள் படைத்தவர்களுக்கு என்ன நடந்ததோ அதுவே காத்திரமான படைப்பாளிகளுக்கு நடந்திருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் பிரச்சார நோக்கம் கொண்டவையாகவே அமைந்தன. அவர்களின் படைப்பின் உச்சமாகக் கருதப்படும் ஆணிவேரும் அவ்வாறே. எவ்வாறான கருத்தியல் சுதந்திரத்தையும் அனுமதிக்காத ஒரு இயக்கத்திடம் இருந்து வரும் படைப்புகளில் நாம் இரத்தம் தோய்ந்த சதைகளையே காண்கிறோம்.
யமுனா ராஜேந்திரனின் அரசியல் மீது தாமிர மீனாட்சியும் மாயாவும் விமர்சனம் வைக்கலாம். அவரது மெளனம் தொடர்பாக எனக்கும் விமர்சனம் உண்டு.
ஆனால்…
//ஈழத்தமிழர்களை சொந்த வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தியதை இனிமேலாவது நிறுத்துங்கள்.. உங்களுக்கும் ஏதாவது கையூட்டு வாங்கிக் கொள்வதற்கு ஈழத்தமிழரைப் பற்றி நீங்கள் எழுதியது போதும்…// தாமிர மீனாட்சி
//உங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதுவதை விடுத்து..// மாயா
தயவு செய்து மேலுள்ளது போன்ற குற்றச்சாட்டுக்களை எழுந்தமானமாக வைப்பதை தவிர்ப்பது மட்டுமே காத்திரமான விவாதத்திற்கு உதவும். யமுனா ராஜேந்திரனை நான் எழுத்துத் துறைக்குள் வந்தது முதல் அறிவேன். புலிகள் விடயத்தில் அவரிடம் ஒரு மென்போக்கு உள்ளது. அது அவரிடம் மட்டுமல்ல இலங்கைக்கு வெளியே உள்ள பல்வேறு முற்போக்கு சக்திகளிடம் அத்தன்மையுள்ளது. அதற்குக் காரணம் அவர்களது சமன்பாட்டில் அரசுக்கு எதிரான ஒடுக்குமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம். இதனை புலிகளின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி கருத்தியல் ரீதியாக அதனை நிறுவுவதை விடுத்து ‘பிழைப்புக்காக’ என்று முத்திரை குத்துவது மிகத்தவறு.
யமுனா ராஜேந்திரனுக்கு தன்னுடைய அரசியல் தேர்வை மேற்கொள்ளவும் அது பற்றிய அபிப்பிராயத்தை வெளியிடவும் முழுமையான சுதந்திரம் உண்டு என்பதை நாம் மதிக்க வேண்டும். ‘வயிற்றுப் பிழைப்புக்காக’ யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார் என்பது மிக மோசமான குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டை வைப்பதன் மூலம் தாமிர மீனாட்சியும் மாயாவும் உங்கள் எழுத்தியல் நாகரீகத்தை தவறவிடுகின்றீர்கள் என்றே நினைக்கிறேன்.
த ஜெயபாலன்
அலாவுதீன்
ஜெயபாலன் நாகரீகம் என்று பார்ப்பதானால் முதலில் குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் இவர் போன்றவர்கள் தாமாகத் திருந்தியிருப்பதுதான் நியாயம். அதை அவர்கள் செய்யத் தவறியதன் விளைவே மாயாவினதும் தாமிராவினதும் கருத்துக்கள்.
புலிகள் மீது மென்மையான போக்கு இவர் வைத்திருந்தார் என்பதல்லாம் மிகைப் படுத்தலாகவே தோன்றுகிறது.அதை விட புலிகள் மீதான போக்கை சமப்படுத்தியதன் மூலம் தமது இருப்பை புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் புலி எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் சமப்படுத்திக்கொண்டவர்களில் இவரும் ஒருவர் என்று சொல்வதுதான் பொருந்தும்.
அப்படிப் பார்க்கும் போது அவர்களின் கருத்துக்களில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
மாயா
ஜெயபாலன் > யமுனாவின் எழுத்துகள் அப்படி எம்மை எழுதத் தூண்டின. எமக்கும் ; அவருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லை.
யமுனா ; ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ எனும் போதே > அங்கே ஏதோ ஒன்று முள்ளாகிறது? இவர் வேறு ஏதாவது ஒரு தலைப்பை வைத்திருந்தால் இப்படி எழுத ; எம்மைத் தூண்டியிருக்காது. ஈழத்தில் ஒரு நல்ல சினிமா உருவாக புலிகள் விரும்பவில்லை. அவர்களது தொலைக் காட்சிப் பிரிவினர் தயாரித்த குறும்படங்களையும் > அவர்களுக்கு சார்பான படைப்புகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்தார்கள். யாழ்பாணத்தில் நடைபெற்ற சில சினிமா பயிற்சி பட்டறைகளுக்கு பின் ; அங்கே படைப்பாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அவர்களால் தொடர்ந்து படைப்புகளை உருவாக்க முடியவில்லை. மூக்குப்பேணி போன்ற குறும்படங்கள் உருவாக காரணமானவர்கள் ; பின்னர் இடம் மாறி கொழும்புக்கு வந்து வாழ வேண்டியதாயிற்று.
புலத்திலும் நல்ல படைப்புகள் உருவாகாமல் பொனதற்கு புலிகளது பரிசுகளை பெறுவதற்காக உருவாகியதே காரணமாயின. குறும்பட விழாக்கள் புலி சார்ந்தவர்களாலோ அல்லது அவர்களது அமைப்புகளாலோதான் நடைபெற்றன. இன்னும் நடைபெறுகின்றன. அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி ; அவர்களிடமிருந்து பரிசு பெறுவதற்கான உத்திகளையே பெரும்பாலானவர்கள் செய்கிறாகள். புலத்தில் புலிகளின் கை இன்னும் ஓங்கியே இருக்கிறது. எனவே புலிகளின் பிரசார படைப்புகளையே இன்னும் எம்மால் பார்க்க முடிகிறது.
அண்மையில் வெளியாகியுள்ள இந்த பாவம் நாங்கள் செய்த பாவம்தான்?
-http://www.youtube.com/watch?feature=player_embedded&v=C4R-csjM9s8
palli
//வயிற்றுப் பிழைப்புக்காக’ //
இப்படியான வார்த்தைகளை யார் எழுதினாலும் தேசம் தணிக்கை செய்து அந்த இடத்தில் ஒரு நாகரிகமான வார்த்தையை போடலாம், இப்படி
பல இடத்தில் பல்லிக்கு தேசம் செய்துள்ளது; அதன்பின்பே நான் விட்ட தவறு எனக்கே தெரியவரும், அதேவேளை தணிக்கை செய்யும்போது
கருத்தாளரின் கருத்து மாறிவிடாமல் பார்ப்பதும் நிர்வாகத்தின் கடமையே;
மாயா
//அப்படிப் பார்க்கும் போது அவர்களின் கருத்துக்களில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. – அலாவுதீன் //
நன்றி அலாவுதீன்.
பசியோடு இருக்கும் மனிதனுக்கு இந்த வார்த்தையை சொல்வதோ அல்லது படிக்காத ஒரு மனிதனுக்கு இந்த வார்த்தையை சொல்வதோ மோசமானது. ஆனால் ; அடுத்தவனுக்கு உபதேசம் பண்ணும் ” அது அவரிடம் மட்டுமல்ல இலங்கைக்கு வெளியே உள்ள பல்வேறு முற்போக்கு சக்திகளிடம் அத்தன்மையுள்ளது. அதற்குக் காரணம் அவர்களது சமன்பாட்டில் அரசுக்கு எதிரான ஒடுக்குமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம். ” எனச் சொல்லும் பேர்வழிகளைப் பார்த்து இதைவிட சொல்ல வேறு நாகரீகமான வார்த்தைகள் இல்லை. அடுத்தவருக்கு வழி காட்ட வேண்டியவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக ; அடுத்தவனை தனது திறமையால் படு குழியில் தள்ளுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளதே? அதை ஏன் செய்து தொலைக்கிறார்கள்?
இப்புத்தகம் புலிகள் காலத்தில் எழுதப்பட்டு ; அச்சில் இப்போதுதான் வந்துள்ளது என நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்த தலைப்பே மாறியிருக்கும்.
palli
//அடுத்தவருக்கு வழி காட்ட வேண்டியவர்கள் //
இதனால்தான் நீங்களோ தாமிராவோ அப்படியான வார்த்தைகள் வேண்டாம் என சொன்னேன்; எல்லோரும் எல்லா வார்த்தையும் பாவிக்கமுடியாது; புலிகளது வாக்கான ஒட்டுகுழு என சொல்லும்போது எமக்கு மனகஸ்றத்தை கொடுத்ததை நாம் மறக்கலாமா?? மேலும் யமுனாவின் கருத்தும் இங்கு என்னும் பதிவாகவில்லை; எம்மிடம் நியாயம் இருக்கும் போது நாம் வன்முறையில் இறங்க தேவையில்லை; அதே வேளை புத்தரை அவர் எதிர்ப்பதால் அவர் தவறுகிறார் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை; எதுக்கும் யமுனாவின் கருத்தறிந்த பின் விபரமாய் வாதிடலாம் ;
தொடரும் பல்லி;;
மாயா
மகிந்த ; ஓமந்தை வரை போய் நாட்டு பணிகளில் ஈடுபட்டுளார்.
-http://www.lankadeepa.lk/2010/10/19/front_news/11.htm
BC
தங்களால் முடிந்தளவு ஒடுக்கு முறை செய்த புலிகள் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று அப்படியே யமுனா ராஜேந்திரன் நம்பிவிட்டார்! முற்போக்குவாதிகளிடையே பாலசிங்கம் தான் அதி சிறந்தவர் என்றும் சொல்கிறார்கள்.
மாயா, தாமிரா மீனாஷி கருத்துக்கு எனக்கு மாற்று கருத்து இல்லை.
kadavul
/.” குறும்பட விழாக்கள் புலி சார்ந்தவர்களாலோ அல்லது அவர்களது அமைப்புகளாலோதான் நடைபெற்றன”/
லண்டனிலும் கனடாவிலும் பிரான்சிலும் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாக்கள் புலிகளினது அல்ல. அவர்களுக்கு சார்பானதுமல்ல.
இடது சாரிகள் பொதுவாகவே புலிகளுக்கு சார்பாகவே நீண்ட காலமாக இயங்கி வருகின்றார்கள். யமுனா தன்னை இடது சாரியாக காட்டிக் கொண்டாலும் அவர் இயஙகியலில் ஒரு புத்திஜீவி புலியாகவே உள்ளார்.
இயல்பில் யமுனா நல்லதொரு மனிதர். மனித நேயமிக்கவர்.
மாயா
கடவுளே நேரில் வந்து இடதுசாரிகளை பற்றிச் சொல்லும் போது ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
kuru
அனைவருக்கும்
உங்களுக்கு யமுனா மீது உள்ள காழ்புணர்வினால் மட்டுமே உங்கள் விமர்சனங்கள் உள்ளன. அவர் புத்தகத்தின் மீது கருத்துகள் ரீதியில் விமர்சனம் இருந்தால் அதனை நீங்கள் வாசித்து விட்டு சொன்னால் பிரயோசனமாக இருக்கும்.
தயவு செய்து உங்கள் இயலாமையை மற்றவர்கள் மீது சேறு அடிப்பதன் மூலம் நீங்கள் நல்லவர்கள் அல்ல…
தாமிரா மீனாஷி
ஆயுதங்களின் பின்னணியுடன் ஈழத்தமிழருக்காக அனுதாபத்தில் புத்தகம் போட்டவர்கள்/போடுபவர்களின் உள்நோக்கம் பற்றியதே எனது கேள்வி.. ..
எனது கேள்வியை தயவு செய்து கவனியுங்கள்:
முள்ளிவாய்க்காலில் இந்தியப் படைகள் வேட்டையாடிய போது இவர்கள் ஏன் ஒர் சிறு முனகல் சத்ததையும் எழுப்பவில்லை? (தேசபக்க்தி காரணமா அல்லது இந்திய தூதரக அதிகாரிகளின் கோபத்துக்குப் பயந்தா?
அறிவாளர்களாக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் நீங்கள் உங்கள் நாட்டில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் பற்றி பாராமுகமாய், அலட்டிக் கொள்ளாமல் இருப்பது ஏன்? (இவர்களில் சிலர் தம்மைத் தாமே நக்ஸலைட் தோழர் என்றும் பட்டம் சூட்டிக் கொண்டதுண்டு. இலங்கைத் தமிழர் அனுபவிக்கும் அடக்கு முறையைவிட ஆதிவாசிகளும், தலித்துக்களும் அனுபவிக்கும் அரச அடக்கு முறை மிகக் கொடியது. அவை பற்றி ஏன் நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை?
எழில் சகோதரர்கள் தொடக்கம் இவர்கள் வரை பகிரங்கமாக ஒரு தோற்றத்தையும் இரகசியமாக இன்னொரு வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
புத்தகத் தலைப்பில் ஈழம், புத்தன் என்று போட்டால் இளிச்சவாய் ஈழத்தமிழர் எதைப் பினாத்தினாலும் வாங்கிச் செல்வார்கள் என்பது இவர்களது கணிப்பு..
ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் இவர்கள் (சுய) நன்மையடைந்தது போதும். மாட்டுவண்டியில் தான் போக முடியுமெனினும் ஈழத்தமிழர்கள் சொந்த மாட்டு வண்டியில் போகட்டும்! ( இரவல் காருக்கு பதிலாக)