வெடிபொருளான டைனமட்டையும் அதன் முக்கிய வெடிபதார்த்தமான ரிஎன்ரி யைக் கண்டுபிடித்தவரான அல்பிரெட் நோபலின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கண்டுபிடிப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுதான் நோபல்பரிசு. இப்பரிசுகளின் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது சமாதானப்பரிசு என்பதை யாவரும் அறிந்ததே. அல்பிரெட் நோபல் என்பவர் சுவீடனைப் பூர்வீகமானவராகக் கொண்டாலும் சமாதானப்பரிசை நோர்வேயில் கொடுக்க வேண்டும் என்று பணித்துச் சென்றார். அதன் காரணமாக சமாதானத்துக்கான நோபல்பரிசு நோபலின் எழுதிச்சென்ற கோட்பாட்டுக்கு இணங்க நோர்வேயிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளின் காலணித்துவத்தின் கீழ் நோர்வே இருந்தாலும் தனது சுதந்திரத்தை, நாட்டின் விடுதலையை இரத்தம் கொலைகள் இன்றி இராஜதந்திரமுறையில் நோர்வே வென்றெடுத்தது. இதனால் சமாதானப் பரிசு வழங்குவதற்கு நோர்வேயே சரியானது என அல்பிரெட் நோபல் கருதியிருந்தார். இருப்பினும் இரண்டாம் உலகப்போரில் சுவீடன் நாசிப்படையை திறந்து விட்டு எதிர்ப்பின்றி இருந்தாலும் நோர்வே ஜேர்மன் நாசிப்படையை எதிர்த்து கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட வேண்டியது ஒன்றாகும்.
ஒரு பேரழிவுவைத்தரும் டைனமயிட்டைக் கண்டுபிடித்தவர் சமாதானத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை உலகிற்கு ஈர்ந்து சென்றிருக்கிறார் என்றால் இதன்பின் ஒளிந்திருக்கும் எண்ணத்தை நாம் தோண்டிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கத்தியை நல்ல விடயங்களுக்கும் பாவிக்கலாம் கத்தியைக்கொண்டு கொலையும் செய்யலாம். அது கத்தியின் பிழையன்று. அதைப் பாவிப்பர்களின் பிழையே. அல்பிரட் நோபலின் நோக்கம் தனது கண்டுபிடிப்பு நல்லவற்றிற்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சமாதானத்துக்கான பரிசை தனிப்பட முக்கியப்படுத்தினார். இன்றும் மலைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பாதைகள் அமைக்கவும் அவரின் கண்டுபிடிப்பே உதவுகிறது என்றாலும் பேரழிவாயுதங்கள் தயாரிப்பதற்கு இந்த ரிஎன்ரி யே துணைபோகிறது. அதனால் அல்பிரெட்டின் நோக்கம் பிழை என்று கூற இயலாது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் வளரவேண்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வரவேண்டும் என்பதே இப்பரிசுத்திட்டத்தின் நோக்கமாகும்.
2010 க்கான நோபல்பரிசை நோர்வே நோபல்பரிசுக்குழு 8.10.2010 மாலை அறிவித்தது. அந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பையும் சீனாவில் பெரிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பரிசானது மனித உரிமைகள் ஆர்வலரும் போராளியும் எழுத்தாளரும் ஜனநாயக விரும்பியுமான சீனத்தைச் சேர்ந்த லியூ சியாபூ (Liu Xiaobo) க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மாற்றம் வேண்டும், மனிதஉரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், அரசியல் மாற்றத்தினூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்தான் லியூ. இவர் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று பலஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதாவது 09.10.2010 காலை இந்த நோபல்பரிசுச் செய்தியை தன் கணவனுக்குச் சொல்லச் சென்ற அவரின் மனைவியை காணவில்லை என்ற அறிவித்தல் நோர்வேக்கு கிடைத்தது. லியூவின் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டபோது அவரின் வாக்கு மூலப்படி வீட்டுக்காவலில் இருந்த லியூவின் மனைவியை சீனாதான் மறைத்து வைத்துள்ளது என்று அறியமுடிகிறது. லியூவுக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டபோது சீன வெளிநாட்டமைச்சகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது.
லியூவுக்கு எதற்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது என்பதை நோபல்குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், முன்னாள் தொழிற்கட்சிச் தலைவரும், இன்றைய ஐரோப்பா அமைச்சரச் செயலாளருமான தூர்பியோன் யாலாண்ட் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியாக சீனா முன்னேறினாலும், பல சர்வதேச உடன்படிக்கைகளை சீனா கையொப்பமிட்டாலும் அதனை மீறியுள்ளது எனவும், சீனச்சட்டம் 35ன்படி பேச்சுரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, எழுத்துரிமை, ஊர்வலம்போகும் உரிமைகள் எழுத்துருவில் இருந்தாலும் அவை நடைமுறையில் மட்டறுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சீனா தனது சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துள்ளது என்பதை லியூவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/user/thenobelprize
இந்த நோபல்பரிசை லியூவுக்கு வழங்குவதால் நோர்வே பொருளாதார ரீதியாக பல தீமைகளை அனுபவிக்கும் என்பதை அறிந்தும் நோர்வே நோபல்குழு தன்நிலை தளராது பிசகாது அப்பரிசை லியூவுக்கு அளித்துள்ளமை பாராட்டுக்குரியது என பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீபெத்திய ஆத்மீகத் தலைவர் டலாய் லாமா நோர்வே நோபல்குழுவுக்கு தனது பாராட்டை இது ஒரு துணிகரமான செயல் என்று விமர்சித்துள்ளார். நோர்வேயின் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சீனாவுக்கே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடையை நோர்வே எதிர்பார்த்திருக்கிறது.
பல சீன உல்லாசப் பயணிகளிடம் செவ்விகண்ட போது பலவிதமான கருத்துக்களை அறிய முடிந்தது. அதாவது ஏன் இந்தப் பரிசை அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை, சீனச்சட்டத்துக்கு எதிரான பல வழக்கறிஞர்கள் சிறையில் சீனஅரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்குக் கொடுக்கலாமே என்ற மாதிரியான பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உலகின் பல நாடுகளும் இப்பரிசு முன்மொழிவை துணிகரமான செயல் என்று பாராட்டி வரவேற்றுள்ளமை சிறப்புக்குரியதே.
BC
தேவையான கட்டுரை நக்கீரா. ஜனநாயகம் தேவை என்று போராடியவருக்கு நோபல்பரிசு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.நோர்வே நோபல்குழுவுக்கு பாராட்டுகள்.
Nackeera
நன்றி பி.சி. இந்த நோபல்பரிசால் நோர்வேயில் நடைபெறப்போகும் அனத்தங்களையும் யோசிக்கவேண்டியுள்ளது. அவசர அவசரமாக எழுதி அனுப்பியதால் லியூபற்றியும் அவரது போராட்டங்கள் பற்றியும் எழுதவாய்ப்புக் கிடைக்கவில்லை. நேரவின்மையும் வேலைப்பழுக்களுமே இதற்குக்காரணம். முடிந்தால் பின்னோட்டமாகவோ அன்றி இடைச்சொருகலாகவோ போட முயல்கிறேன். மாற்றுக்கருத்து மாற்று அரசியல்கள் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமே.
மாயா
தேவையான கட்டுரை நக்கீரா. நோபல் குழுவுக்கும்; லியூ சியாபூக்கும் வாழ்த்துகள்.
நமது சோசலிச நண்பர்களுக்கு ஏதேதோ சொன்னார்களே? இதுதான் கமியுனிசமா?
நந்தா
நோபல் பரிசு இப்போது “நோண்டல் பரிசு” அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.
நோர்வே “சமாதானம்” என்று இலங்கையில் புகுந்து புலிகளோடு அடித்த கொட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஏ-9 பாதை “கப்பம் கை வே” என்று பெயரெடுத்தது இந்த நோர்வேக்காரர்களின் புண்ணியத்தில்த்தான் என்பது உலகறிந்த உண்மை. புலிகள் கொலை செய்தால் சரியென்றும் வாதித்த நோர்வே “சமாதானப் பரிசு” என்று சீனாவை நோண்டப் புறப்பட்டிருக்கிறது. இந்த டைனமைட் வியாபாரிகளின் பரிசினால் “சமாதானம்” எங்கும் தழைத்தோங்குவதாகத் தகவல் இல்லை!
Nackeera
மாயா நீங்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது மகிழ்ச்சிக்குரியதே ஆனால் லியூவின் நிலை அவரது மனைவியின் நிலைபற்றி கவலைப்பட வேண்டியுள்ளது. மாற்றுக்கருத்துக்களை வரவேற்காத சமூகத்தில் மாற்றம் இருக்காது. தேங்கிய குளம்போல் நாற்றமெடுக்கும். வாழ்வும் நீரும் ஒரேமாதிரியானவை. இரண்டும் ஓடவேண்டும்.
Maruthu
நந்தா அவலை நினைத்து உரலை இடிப்பவர். புலிகளைப் பயங்கரவாதிகள் நோர்வே நோண்டல்காரர்கள் என்றால் சீனா என்னவாம்? உலகத்தில் மனிதவதை சீனாவில்தான் நடைபெறுகிறது. வெளிநாடுகளில் பலவங்கிகளின் பங்குகளை வைத்திருக்கும் முதலாளி சீனா தொழிலாளரின் தோழனா?. யாருக்கு காது குத்துகிறியள்.
chandran .raja
மருதுவின் கவலைகள் எல்லாம் சீனாவின் மனிதவதைகளைப் பற்றித்தான். ரொம்ப நல்லாயிருக்கிறது. மனித வதைகளை எப்படி கணக்கெடுக்கிறீர்கள் மருது.
சீனாவில் கொறியாவில் நடந்தால் மனிதவதை ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுளில் வதையோடு மட்டுமல்ல வாழமுடியாமல் போவதை-அழிக்கப்பட்டதை எப்படிச்சொல்வது? இதற்கான நீதியை வரையறுத்தவன் எவனோ? உண்மையில் ஆப்கானிஸ்தான் ஈராக் யுக்கோசுலவக்கியா நாடுகளின் மீது குண்டுவீசி மனிதவதைகளை அல்ல மனிதக்கொலைகளை நடத்தியபோது நெக்குருகி வருந்தினீர்களே யானால் நீங்களும் லீயூவுக்கு கண்ணீர்விட உரிமையிருக்கிறது.
இதைவிட நுறுமடங்கான மனிதப்படு கொலைகளே எம்மை-உம்மை உசுப்பாத போது லீயூமின் மறியலும் சீனாவின் அக்கறையும் எங்கிருந்து வந்ததுவோ? மருது கண்ணீர்விடுவதற்கு முன்பு எதற்காக கண்ணீர் விடவேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவெடுங்கள். மனிதவதைகளை விட மனிதப் படுகொலைளே மனிதனின் சுயஉணர்வைத் தூண்டுபவை.
அமெரிக்காமூலதனம் சர்வதேசரீதியாக வலுவிழந்து போனதும் ஒருமாபெரும் யுத்தத்தின் மூலமே தன்னை தகமமைத்துக் கொள்ளமுடியும் என்கிற குற்றச்சாட்டே!சீனாவுக்கு மேல்லானது.கடந்த காலத்தில் யுத்தத்தை வைத்தோ தமது வயிற்றை கழிவிக்கொண்டார்கள்.இந்த பிரச்சாரத்தின் ஒரு வடிவைத்தையே இன்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
அதேநேரத்தில் லீயூ-கியூ மறியல் நியாமானது எனக்கூறமாட்டேன்.அதை தமது தேவைக்கு பயன்படுத்துவதை இந்த வல்லரசுகள் நிறுத்தவேண்டும். அதைக்கு தீர்ப்பு வழங்கவேண்டியவர்கள் சர்வதேச தொழிலாளிவர்க்கமே!.
BC
சந்திரன் ராஜா, லியூ சியாபூ என்ற மனித உரிமைகளுக்காக போராடிய சிறந்த மனிதன் பற்றிய உங்கள் கருத்து மிகவும் ஏமாற்றம் தருகிறது.மாக்ஸிய பார்வையில் பார்ப்பதை விடுத்து உங்கள் சொந்த பார்வைனுடாக பார்த்தால் மனித இனத்தின் விடியலுக்கான உண்மைகளை அறிந்து கொள்வதற்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சாந்தன்
//….மருதுவின் கவலைகள் எல்லாம் சீனாவின் மனிதவதைகளைப் பற்றித்தான். ரொம்ப நல்லாயிருக்கிறது. மனித வதைகளை எப்படி கணக்கெடுக்கிறீர்கள் மருது. ….//chandran .raja
மனிதவதைகளை ‘கணக்கெடுக்க’ என்ன சாட்சி வேண்டும். மனிதவதைகளே போதும். சிரீலங்கா ராணுவ அரசு கற்பழிப்புக்கு கொண்டுவா சாட்சியை என்பது போலுள்ளது.
//…..சீனாவில் கொறியாவில் நடந்தால் மனிதவதை ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுளில் வதையோடு மட்டுமல்ல வாழமுடியாமல் போவதை-அழிக்கப்பட்டதை எப்படிச்சொல்வது? இதற்கான நீதியை வரையறுத்தவன் எவனோ? உண்மையில் ஆப்கானிஸ்தான் ஈராக் யுக்கோசுலவக்கியா நாடுகளின் மீது குண்டுவீசி மனிதவதைகளை அல்ல மனிதக்கொலைகளை நடத்தியபோது நெக்குருகி வருந்தினீர்களே யானால் நீங்களும் லீயூவுக்கு கண்ணீர்விட உரிமையிருக்கிறது……//
இங்கே மனிதவதைகளுக்கு கண்ணீர்விட ‘உரிமை’ வேண்டுமா? ஏதோ மானிடம், மனிதாபிமானம் என பந்தி பந்தியாக எழுதியது எல்லாம் பம்மாத்தா?
//..இதைவிட நுறுமடங்கான மனிதப்படு கொலைகளே எம்மை-உம்மை உசுப்பாத போது லீயூமின் மறியலும் சீனாவின் அக்கறையும் எங்கிருந்து வந்ததுவோ? ….//
ஒத்துக்கொள்கிறீர்கள் உங்களைப்பற்றி. நன்றி!
ஆனால் அதற்குள் மற்றவனையும் இழுத்து உங்களுக்கு ஈடுகட்ட வேண்டாமே!!
//….மருது கண்ணீர்விடுவதற்கு முன்பு எதற்காக கண்ணீர் விடவேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவெடுங்கள். மனிதவதைகளை விட மனிதப் படுகொலைளே மனிதனின் சுயஉணர்வைத் தூண்டுபவை….///
என்னது கண்ணீர்விடமுன்னர் எதற்காக கண்ணீர்விட வேண்டும் என முடிவெடுக்கவேண்டுமா? அடேங்கப்பா? அவ்வாறு முடிவெடுத்துக் கண்ணீர் விடக்கூடிய நபர்களை ‘நடிகர்கள்’ என்பார்கள்! மனிதர்கள் என்பதில்லை! நீங்கள் எந்த வகை?
//….அதேநேரத்தில் லீயூ-கியூ மறியல் நியாமானது எனக்கூறமாட்டேன்.அதை தமது தேவைக்கு பயன்படுத்துவதை இந்த வல்லரசுகள் நிறுத்தவேண்டும்….//
சீனா வல்லரசு இல்லையா?
//….அதைக்கு தீர்ப்பு வழங்கவேண்டியவர்கள் சர்வதேச தொழிலாளிவர்க்கமே!….//
நல்ல , வசதியான ‘மறைப்பு’ !!!
சீனாவில் இருந்து தப்பிவந்த தொழிலாள வர்க்கம் மேற்குநாடுகளில் வாழ்கிறார்கள் கேட்டுப்பாருங்கள் சீனாவின் ‘முதலாளி வர்க்கம்’ பற்றி. கதை கதையாக வரும்!
Nackeera
மேலதிக குறிப்பு
ஐரோப்பாவில் சிறந்த பாடகராகத் தெரிவு செய்யப்பட்ட நோவேயிய அலெக்ஸ்டான்டர் றீபாக் பலமாதங்களுக்கு முன்னரே சீனாவுக்கு தன்குழுவுடன் போவதாக திட்டமிடப்பட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இன்று சீனாவின் கலாச்சாரமந்திரியின் அறிவிப்பில் இந்தப்பயணம் இரத்துச் செய்யப்பட்டது. இதற்குக் காரணம் நோர்வே நோபல்பரிசை லீயூக்குக் கொடுத்தமையே காரணம். நோபல்பரிசு ஒரு அரசுசார்பற்ற சுயாதினமாக இயங்கும் ஒரு அமைப்பென்பதை சீனா அறிவது முக்கியம். சீனாவின் இந்தத்தடை குழந்தைப் பிள்ளைத்தனமானது என்பது எனது எண்ணம்.
அதை ஒரு பெரியவிடயமே அல்ல. ஆனால் இன்று சீனப்பிரதமர் நோபல்பரிசுபெறும் லீயூ ஒரு கிறிமினல் என்று வலிந்துரைத்தது சீனாவின் மீது இருந்த நம்பிக்கையையும், மனிதமற்ற செயலையும் வலியுறுத்துவதாக அமைகிறது. அவருடைய மனைவியுடன் யாரும் கதைப்பதற்கே அனுமதிக்கப் படவில்லை. இவர் எந்தக்குற்றமும் செய்யாதவர். இது தானா சீனாவின் நீதி. கமியூனியமே எந்த இடதுசாரித்துவமே இப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறவில்லை. இன்றைய சீன அரசு இப்படி நடந்த கொள்வதற்காக கம்யூனிசயம் பிழை என்றாகாது.
இங்கு லீயூ ஒரு எழுத்தாளர் என்பது மட்டுமல்ல ஒரு ஜனநாயகவாதி. இவர் சீனாவின் சட்டத்துக்கு எதிராகச் செயற்படவில்லை என்பது அவரது வாக்கு மூலம். மனிதஉரிமைகள் சட்டத்தின் கீழ் 33 ஆவது சாரப்படி பேச்சுரிமை, எழுத்துரிமை இன்னும் பல அடங்கியுள்ளன: சீனத்துச் சட்டத்தைத்தான் நடைமுறைப்படுத்தவும் என்று போராடினார். சீனத்துச் சட்டத்தை அவமதிப்பது லீயூவா அல்லது இன்றிருக்கும் சீன அரசா என்று வினாவவேண்டியுள்ளது.
நந்தா
சீனாவில் சிறை வைக்கப்பட்ட ஒருவருக்கு “அழுபவர்கள்” பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு “ஜனனாயகம்” என்று அமெரிக்கவும் சகபாடிகளும் லட்சக் கணக்கில் மக்களை “வேறு” தேசங்களில் கொலை செய்து கொள்ளையடிப்பது சரியானது. அந்த மக்களுக்காக கண்ணீரும் கிடையாது, காடாத்தும் கிடையாது.
தமிழீழம், ஜனநாயகம் என்று கொலை கொள்ளை நடத்துவது மனிதாபிமானம் என்பது சீனத்துக்கு எதிராக கதைப்பவர்களின் சித்தாந்தம்!
நோர்வெக்காரர்கள் “கொலை” விழக்கூடிய இடங்களை தேடி அலைகிறார்கள். இலங்கையில் கிடைத்த லாபம் போல எங்காவது கிடைக்குமா என்று சொல்கயிம் கும்பல் அலைகிறது!
நோர்வேக்காரர்களின் “சமாதானம்” பற்றிய புலுடாக்களை இலங்கயில் அவர்கள் புலிக் கும்பல்களோடு செய்த கொலை, கொள்ளை கூத்துக்களிலிருந்து அறியலாம்.
சீனத்திலிருந்து வந்தவர்கள் மாவோ பற்றி தூற்றுவது கிடையாது. ஆனால் அமெரிக்காவின் வால்களான தாய்வான் சீனர்கள் மாத்திரம் சீனா பற்றி கதைப்பதை யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்?
Maruthu
நந்தா//சீனாவில் சிறை வைக்கப்பட்ட ஒருவருக்கு “அழுபவர்கள்” பரிதாபத்துக்குரியவர்கள்// என்ன சீனாவில் ஒருவனா? பகிடியா? கமியூனிசியத்துக்கு எதிர்த்துக் பேசியவர்கள்: அரசின் எதிரிகள் அப்பாவிகள் என்று சீனாவில் மனிதவதை சிறைகளில் நடப்பதை அறியவில்லைப் போலும். அப்படியிரக்கு சீன அறிவு. வளமையாக நந்தா. சித்தங்கேணிக்கு வழிகேட்டால் கோப்பாய்கு வழிசொல்வார். அதே பாணியில் இங்கும் தொடர்கிறார். சீனாவுக்கு லியூவுக்கும் நோர்வேக்கு இடையிலான நோபலின் பரிசு பேசப்படும் போது அமெரிக்கா பாதிரி போதகர் என்று தொடருவார் நந்தா? இப்படித்தான் எமது பேரமக்கள் 60க்குப் பிறகு கதைத்தவை.
அமெரிக்கா செய்த அட்டகாசங்கள் உடனுக்குடன் வெளிவரும். அது காரணம் மூடப்பட்ட நாடு இல்ல. சீனாவில் அன்றாடம் நடக்கும் சித்திரவதைகள் கொலைகள் என்றும் வருவதில்லை. இதுதான் சீனத்துச் சோசலிசம். தொழிலாளர் தோழன் சீனா நிலக்கரிச்சுரங்கத்துக்குள் அடைபட்டுபோது சீனன் என்னசெய்தான்? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன செய்யப்பட்டன? நூற்றுக்கணக்கில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு என்ன நடந்து. இதுகளாவது தெரியுமா? கண்ணை மூடிக்கொண்ட தொழிலாளர் தோழனாம் சீனா
Kusumpu
நோர்வே அல்ல நோபல்குழு இப்பரிசை லியூவுக்குக் கொடுத்தது பிழை என்று வாதிடுவது நியாயமானது. ஆனால் அப்படி அல்லாமல் நோர்வே அமெரிக்கா பற்றிப் கதைப்பது தேவையில்லாதது. எனது கேள்வி லியூவுக்கு இப்பரிசு கொடுத்தது ஏன் பிழையானது என்று நந்தாவோ சந்திரனோ சொல்லது கதைகளை வேறெங்கோ கொண்டு செல்கிறீர்கள்.
//சீனத்திலிருந்து வந்தவர்கள் மாவோ பற்றி தூற்றுவது கிடையாது. ஆனால் அமெரிக்காவின் வால்களான தாய்வான் சீனர்கள் மாத்திரம் சீனா பற்றி கதைப்பதை யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்// இப்ப இருப்பது மாவே கட்டிய சீனா அல்ல. படுசர்வதிகாரச் சீனா. இப்ப நீங்கள் எழுதுவது மாதிரி சீனாவில் இருந்து எழுதிப்பார்க்கலாமே. ஏன் வலதுசாரி நாடுகளில் தவங்கிக்கிறீர்கள். உங்கள் ஐடியல் நாடல்லவா சீனா. அங்கே போய் இருக்கலாமே. ஏன் கனடாவில் இருந்து கஸ்டப்படுகிறீர்கள்.
Kusumpu
//மாக்ஸிய பார்வையில் பார்ப்பதை விடுத்து உங்கள் சொந்த பார்வைனுடாக பார்த்தால் மனித இனத்தின் விடியலுக்கான உண்மைகளை அறிந்து கொள்வதற்க்கு மிகவும் உதவியாக இருக்கும்// பி.சி மஞ்சள் காமாளைக்காரடம் மாலைக்கண் நோயுள்ளவனிடம் சொந்தப்பார்வை பற்றிக் கதைக்கக் கூடாது. சந்திரனிடம் என்றும் மாக்சிசப்பார்வை தானே உள்ளது. மாக்ஸ் சாகும்போது கண்தானம் செய்தாரோ என்னவோ?
சாந்தன் கேளுங்கள் நாக்கைப்பிடுங்குமாறு கேளுங்கள்.
//சீனாவில் இருந்து தப்பிவந்த தொழிலாள வர்க்கம் மேற்குநாடுகளில் வாழ்கிறார்கள் கேட்டுப்பாருங்கள் சீனாவின் ‘முதலாளி வர்க்கம்’ பற்றி. கதை கதையாக வரும்//- சாந்தன் இதைத்தான் கட்டுரை கட்டுரையாகப் பின்நோட்டுமாக ஆணி என்ற கவிதையின் பின்னால் ஆணி ஆணியாக அறைந்தோம். இன்னும் இவர்களுக்கு விளங்குவதாய் இல்லைச் சாந்தன். உங்கள் பின்நோட்டம் ஒரு உலுப்பு உலுப்பியிருக்கிறது சாந்தன்.
chandran .raja
லீயூ-வின் கருத்தை விட வேறு எந்த என்கருத்து உங்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது? பி.சீ.
நாம் வாழ்கிற காலத்தில் டயானா ஐஸ்வரியாவையே பேரழிகளாகக் காண்கிறோம். என்னை பொறுத்தவரை அழகி என்கிற தரத்திற்கு உயர்த்தப் பட்டவர்கள்களே! இவர்கள். உண்மையான பேரழிகிகளை சாதியால் ஒடுக்கப்பட்டு புறம்தள்ளி வைக்கப்பட்ட பெண்களிடையே கண்டுள்ளேன்.
இதிலிருந்து என்ன? என்ன தெரிகிறது? அவரவர் சிந்தைனைக் கேற்பவே காட்சிகளும் ரசனைகளும் வேறுபடும்.
தச்சுத்தொழிலாளி வங்காலை மாட்டின் குடும்பத்தையே தொங்கவிட்டு எந்தவித தேடலோ அக்கறையோ இல்லாதவர்களுக்கு லீயூ வில் அக்கறைப்படுவது போலியானது என உங்களுக்கு தெரியவில்லையா?.
chandran .raja
குசும்பு: சாந்தன் மூன்று வருடங்களாக இத்தளத்தில் உலுப்பி விட்டுத்தானே! முள்ளி வாய்காலுக்கு வழிகாட்டினார். இந்த உலுப்பில் மயங்கி “பைலா” போடுவது குசும்புவை போல சில அப்பாவிகள் எப்பவும் இருந்து கொண்டேயிருப்பர்.
எப்ப பிணம் விழும் போய் கவ்வலாம் என்று வாழ்க்கை நடத்தும் போது- அந்த வாழ்கையே அங்கீகரிக்க பட்ட அங்கீகாரமாக ஏற்றக்கொள்ளும் போது நாம் ஊற்றும் தண்ணீர் எல்லாம் பிறகுடத்தே சார்ந்தது தான்.
maruthu
//உண்மையான பேரழிகிகளை சாதியால் ஒடுக்கப்பட்டு புறம்தள்ளி வைக்கப்பட்ட பெண்களிடையே கண்டுள்ளேன்.// அது உங்கள் கண்ணுக்கு மற்றவர்களின் கண்ணுக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. மாக்சிசக் கண்களிலும் அழகிகள் தெரிகிறார்களா? சீனம்பற்றிய கருத்துப்போலவே ஆதாரமற்றதாக இருக்கிறது வங்காலை மாட்டின் குடுப்பக்கதையும். ஏன் புலிகள் தான் போய்பிட்டார்களே ஏன் இக்கதைகள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. உங்களைப் போன்றவர்கள் எழுந்தமானமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
சாந்தன்
//…. இவர்கள். உண்மையான பேரழிகிகளை சாதியால் ஒடுக்கப்பட்டு புறம்தள்ளி வைக்கப்பட்ட பெண்களிடையே கண்டுள்ளேன்.
இதிலிருந்து என்ன? என்ன தெரிகிறது? அவரவர் சிந்தைனைக் கேற்பவே காட்சிகளும் ரசனைகளும் வேறுபடும்…..//
அடேங்கப்பா!!
அழகிகள் அவரவர் காட்சிக்கேற்ப இருக்கலாம். ஆனால் மனித உரிமைக்காக போராடி சிறையில் இருப்பவர் உல்லாச புரியில் இருப்பதுபோல் உங்களின் கண்களுக்கு தோன்றுமா? சிறையை மாடமாளிகைபோல் தெரியப்படுத்தும் உங்களின் ‘கண்களை’ கொஞ்சம் இரவல் கொடுங்களேன் சந்திரன். அல்லது எங்கே வாங்கினீர்கள் எனவாவது சொல்லுங்கள். புண்ணியமாகப் போகும்!
இதில் ‘தாழ்த்தப்பட்ட பெண்கள்’ எங்கே வந்தனர்? பாவம் நோபல் பரிசால் நன்றாக குழம்பி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!
santhanam
அமைதிக்கான சமாதானவிருது இப்போது ஏகாதிபத்திய முதலாலிவர்க்கத்தின் சுயநலத்தன்மையுடன் பிரேரிக்கபடுகிற விருதாகமாறியுள்ளது. சனநாயகம் படுமுட்டாள்களின் மேடை.
சாந்தன்
//…. இந்த உலுப்பில் மயங்கி “பைலா” போடுவது குசும்புவை போல சில அப்பாவிகள் எப்பவும் இருந்து கொண்டேயிருப்பர்….// chandran.raja
தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் பேரழகில் மயங்கி சீனாவின் மனித உரிமைப்போராளிக்கு எதிராக கண்டதேகாட்சி கொண்டதேகோலம் காமாலைக்கண் ‘பைலா’ போல வராதுதான்.
//…ஆனால் அமெரிக்காவின் வால்களான தாய்வான் சீனர்கள் மாத்திரம் சீனா பற்றி கதைப்பதை யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்?..//nantha
இவ்வாறுதான் போலந்து நாட்டிலும் நிகழ்ந்தபோது ’யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்?” என எள்ளி நகையாடினார்கள். போலந்துநாட்டின் தொழிலாலவர்க்க தலைவன் திரு.லெக் வெலென்சா போராடியபோது சிறையிடப்பட்டார். அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோதும் ரஷ்ய ‘எரிச்சல்’ மழையில் ஸ்ரீலங்காவின் மொஸ்கோ சார்புக்காரருக்கு ‘தடிமன்’ வந்தது. பின்னர் போலந்து விடுவிக்கப்பட்டு, ருமேனியா, செகோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா என வந்து ஜேர்மனியின் சுவர் விழுந்து ரஷ்யாவே மாறிவிட்டது. நமது மொஸ்கோ சார்பு நண்பர்கள் இப்போது ‘ஏகாதிபத்திய’ நாடுகளில் கரைசேர்ந்து நடுஇரவில் கண்விழித்து தமது ‘தடிமனுக்கு’ கீபோட் குளிசை மருந்தை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
தாய்வான் நாட்டைச் சொல்லும்போது கவனமாக திபெதை தவிர்த்துவிட்டீர்களே நந்தா?
உலகின் கணிசமான தொகை பெளத்தர்கள் (திபெத், நேபாளம், பூட்டான், இந்திய எல்லை மாநிலங்கள், மொங்கோலியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மேற்கு நாடுகள் போன்றவற்றில் வாழும்) கெளதம புத்தரின் (மனிதாபிமானி, மகான், ஏழைபங்காலன், தொழிலாளர் நண்பன் என பலவகையில் தன்னை வெளிக்காட்டியவர்) மறுபிறவி என வணங்கப்படும் தலே லாமாவுக்கும் இதுதான் நிகழ்ந்தது. அவருக்கு நோபல் பரிசு வழங்கியபோதும் இவ்வாறே பீக்கிங் இல் ‘எரிச்சல்’ மழை பெய்தபோது ஸ்ரீலங்க சீன சார்பாளர்களுக்கு ‘தடிமன்’ வந்தது. அதுதான் போகட்டும் கெளதம புத்தரின் பல்லை போற்றிப்பாதுகாத்து வழிபடுவது மட்டுமல்லாது பெளத்த சாசனத்தை காப்பாற்றுவது அரசியல் யாப்பில் உறுதிசெய்யப்பட்ட ஒரு நாட்டுக்கு வருவதற்கு அவருக்கு விசா இல்லை. ஆனால் உங்களின் ‘நண்பனான’ பாதிரிகளின் தலைவன் பாப்பாண்டவருக்கு அனுமதி உண்டு!
வாழ்க பெளத்த சாசன நாடு..வாழ்க பெளத்தம்…!!!
ஒரு நோயாளி, ஒரு முதியவர் ஒரு பிணம் எனக்கண்டதால் ஞானம் பெற்று புத்தனாகியவன் ஒரு நடை ஸ்ரீலங்காவுக்கு போயிருந்தால் பரிநிர்வாண நிலையடைந்து உலகுக்கு கூறிய தனது கொள்கைகள் பெயரால் மனித உரிமை மீறல்கள் நடக்கும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டான். பேசாமல் யசோதையுடன் அரசாட்சி செய்திருப்பான். பாவம் கெளதம புத்தன்!
நந்தா
குசும்புவுக்கு கனடா பற்றித் தெரியவில்லை. கனடாவும் என்னமோ அமெரிக்காவின் கால் கழுவும்நாடு என்கிறார்.
கனடாவின் லிபரல் பிரதமர் பியரே எலியட் ட்ரூடோ தான் முதன் முதலில் சீனத்துக்கு சென்றவரும் ராஜரீக உறவுகளை எற்படுத்திக் கொண்டவரும் ஆவார். அதன் பின்னரே அமெரிக்காவின் நிக்ஸன் போனார். அமெரிக்கக் கண்டத்தில் கியூபாவுக்கு எதிரான அமெரிக்க கொள்கைகளை பின்பற்றாதவர்கள் கனடியர்கள். அதே லிபரல் பிரதமர் ட்ரூடோ கியூபாவுக்கும் போனவர்.
கனடா ஒரு லிபரல் டெமோகிரசி. அது தெரியாமல் சீனாவுக்குப் போ என்று சொல்லத் தேவையில்லை. தவிர இலங்கையில் பிரிடிஷ் காலத்து கவர்னர்கள், நிவாகிகள் பலரும் தங்களின் சொத்துக்களை முதலீடு செய்துள்ளதும் கனடாவில்த்தான்!
பிரிடிஷ்காரர்கள் எனது நாட்டில் 150 வருடங்கள் இருந்து விட்டுப் போனார்கள். நான் கனடாவுக்கு வந்து 21 வருடங்கள்தானே ஆகிறது. எப்படியும் இன்னமும் 129 வருடங்கள் நான் கனடாவில் இருக்கலாமென்று உத்தேசித்துள்ளேன். (இது எப்படியிருக்கு!)
பாதிரிகள் சொல்வதைப் போல “கனடா” ஒன்றும் கிறிஸ்தவநாடு என்று எண்ணி அவல் இடிக்க தேவையில்லை! நோர்வே, அமெரிகா பற்றிக் கதைக்காமல் இந்த நோபல் பரிசு பற்றி எழுதுவது கூடாது என்று சொல்லும் குசும்பு அது ஏன் என்று சொல்லக் காணோம்.
இரண்டு நாடுகளும் கொலை கொள்ளைகளை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் நாடுகள். இலங்கையை பொறுத்தளவில் 30 வருட அழிவின் பங்காளிகளும், சூத்திரதாரிகளும் இந்த இருநாடுகளும்.
இவர்கள் சமாதானத்துக்குப் பரிசு கொடுக்கவில்லை. சமாதனத்தை எப்படி நாசமாக்கலாம் என்பதற்கு பரிசு என்ற பெயரில் “பணம்” கொடுக்கிறார்கள்.
மாவோ காலத்துச் சீனா இல்லையென்று சொல்லும் குசும்புவும் மற்றவர்களும் இப்போது எதற்காக கதைக்க வேண்டும்? “முதலாளித்துவம்” பக்கம் சீனா சாய்ந்துதான் பணத்தைக் கண்டது என்பவர்கள் எதற்காக சீனா மீது பாய வேண்டும்? முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சந்தோஷப்படமால் “ஐயோ” என்று ஏன் அலற வேண்டும்?
மொத்தத்தில் “வெள்ளைக் கிறிஸ்தவர்கள்தான்” இலங்கையில் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டும் என்ற அடிமைத்தனம் மாத்திரமே வெளிவருகிறது.
நந்தா
மருது என்னமோ சீனாவுக்குப் போய் அங்குள்ள மக்களைக் கண்டு “விபரம்” அறிந்து வந்து கதை சொல்லுகிறார் அதனை மற்றவர்கள்நம்ப வேண்டும் என்ற எதிர் பார்ப்பா?
கனடாவிலிருந்து ஆங்கிலம் படிப்பிக்க நூற்றுக் கணக்கில் கனடியர்கள் செல்கிறார்கள். அதே போல சீனத்து மாணவர்களும் ஆயிரக் கணக்கில் கனடா வந்து படித்துவிட்டு செல்கிறார்கள்.
அவர்கள் காணாதவைகளை இவர்கள் கண்டு விட்ட மர்மம்தான் புரியவில்லை.
கனடாவிலேயே பிறந்து வளர்ந்த எனதுநண்பர் லூ (சீனாவிலிருந்து அடிமைத் தொழிலாளிகளாக பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்களின் பரம்பரை) இன்று ஹுனான் பல்கலைக் கழகத்தில் ஆங்கில விரிவுரையாளர். அவருக்குத் தெரியாத “சீனத்துப்” பிரச்சனைகளை நம்ம தமிழ் ஆளுகள் எப்படி கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை!
இந்தக் கட்டுரை எழுதிய நக்கீரா இன்னமும் அந்த “சீனரின்” வாழ்க்கை விபரங்களை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. தவிர சீனத்துக்கு எதிராக சன்னதம் ஆடுபவர்கள் அனைவரும் புலிகளுடன் நோர்வே அடித்த கூத்துக்களைப் பற்றி மவுனம் சாதிக்கிறார்கள்.
maruthu
நந்தா//மருது என்னமோ சீனாவுக்குப் போய் அங்குள்ள மக்களைக் கண்டு “விபரம்” அறிந்து வந்து கதை சொல்லுகிறார் அதனை மற்றவர்கள்நம்ப வேண்டும் என்ற எதிர் பார்ப்பா?//
நான் சீனருடன் பழப்பமுடையவன் எழுதினேன். அவர்கள் வாழ்வுபற்றி அறிவதால் ஆர்வமாகவும் இருந்தேன். நீங்கள் எதை வைத்துச் சீனாவையும் அங்குள்ள நடப்பவற்றை எழுதுகிறீர்கள்.
//கனடாவிலிருந்து ஆங்கிலம் படிப்பிக்க நூற்றுக் கணக்கில் கனடியர்கள் செல்கிறார்கள்.//நந்தா-
என்ன சீனாவுக்குச் செல்கிறார்களோ? இது என்ன புதுக்கதை உலகமே பிரளப்போகிறதோ.
உங்களுடைய நண்பர் அடிமைத்தொழிலாளியக் கொண்டுவரப்பட்ட பரம்பரையோ தவிர அடிமையாக இருந்தவரல்ல. அவர் பரம்பரையில் ஒருவர் ஆங்கிலவிரிவுரையாளர் என்றால் மேற்கிலுள்ள ஜனநாயகம் மதிப்பதற்கும் பெருமைக்கும் உரியதே. இவர்பரம்பதை சீனாவில் இருந்திருந்தால் எந்த நிலக்கரிச்சுரங்கத்தினுள் தாண்டிருப்பார்களே?
சந்திரன்ராஜா, நீங்கள் உங்களுக்கே பதில் சொல்கிறீர்கள் பின்பு மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்: இதோ பாருங்கள் //எப்ப பிணம் விழும் போய் கவ்வலாம் என்று வாழ்க்கை நடத்தும் போது- அந்த வாழ்கையே அங்கீகரிக்க பட்ட அங்கீகாரமாக ஏற்றக்கொள்ளும் போது நாம் ஊற்றும் தண்ணீர் எல்லாம் பிறகுடத்தே சார்ந்தது தான்// இது உங்களுக்கும் உங்கள் சீனாவுக்கும் நன்றாகவே பொருந்தும். உணவை கொடுத்து உள்ள உதிரத்தையோ உறிஞ்சிக்குடிக்கும் சீனாவை விட பயங்கரவாதிகளும்>பலாற்காரவாதிகளும்>பாசிஸ்டுக்களும்>சர்வாதிகாரிகளுமாக வேறு எவருமே இருக்க இயலாது.
நந்தா
கனடாவிலிருந்து “ஆங்கிலம்” கற்பிக்க போவது தெரியாமல் இருக்கும் மருது “சீனர்களுடன்” என்ன பழகுகிறாரோ தெரியவில்லை! எனது நண்பரின் மூதாதைகள் கனடாவில் அடிமைகள் போலவெ நடத்தப்பட்டனர். அது கனடாவிலுள்ளவர்களுக்கே புரியும்.
உங்களுக்கு இலங்கையே புரியவில்லை. அதற்குள் சீனா பற்றி துவங்கி யாரை மகிழ்விக்கப் போகிறீர்கள்? நிலக்கரி சுரங்கத்தில்த்தான் சீனரின் வாழ்வு என்று காது குத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?
Kusumpu
நந்தா சொல்கிறார் கனடா லிபரல்மெமோகிரசியாம். இந்த சீனாவுக்குப் போகமாட்டாராம். இந்த டெமோக்கிரசி பேசியதால்தானே லியூக்கு இந்த நிலமை. இதைத்தெரியாமலா நந்தா பக்கம் பக்கமாகக் கிழித்தார்? டெமொகிரசிக்கு வரைவு இலக்கணம் இல்லை என்று நீங்கள் தான் சொன்னீர்கள் புதிதாக டெமோகிரசிக்கு வரைவுலக்கணம் நந்தா எழுதியுள்ளாரோ?
எமக்கும் கனடாபற்றிக் கொஞ்சமாவது தெரியும். கனடாவுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. இந்த லிபரன் டெமோகிசிக் கனடாவில் தொழிற்சங்கங்களின் நிலை என்ன என்பதை கொஞ்சம் விமரமாக எழுதலாமே. நீங்கள் இதுவரை சொன்ன முதலாளிகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களால் என்ன செய்ய முடிகிறது. ஐரொப்பாவில் தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் வலு கனடாவில் இல்லை. முடிந்தால் அதுபற்றி விவாதிக்க நான் தயார்.
//பிரிடிஷ்காரர்கள் எனது நாட்டில் 150 வருடங்கள் இருந்து விட்டுப் போனார்கள். நான் கனடாவுக்கு வந்து 21 வருடங்கள்தானே ஆகிறது. எப்படியும் இன்னமும் 129 வருடங்கள் நான் கனடாவில் இருக்கலாமென்று உத்தேசித்துள்ளேன். (இது எப்படியிருக்கு!// இப்படியும் ஒரு கேவலங்கெட்ட ஆசையா. அதுவும் ஒரு ஜனநாயகநாட்டில்தான் இருக்க வேண்டும் என்ற ஆசையைப்பாருங்கள். உங்கள் மாக்சிசமும் சோசலிசமும் என்னாவது. எல்லாம் மற்றவர்களுக்குத்தானா? இதிலிருந்தாவது பின்னேட்டக்காரர்கள் நந்தாவின் போலித்தன்மையைப் புரிந்து கொள்வார்களா? ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே என்ற கணக்காக இருக்கிறது. அதற்குள்ளும் இன்னும் 129வருடங்கள் வாழ ஆசை வேறு. உப்பீடு பிரட்டிசாருடன். எட எங்கப்பா??? தாங்காதையா பூமி.
இங்கே பாதிரிகளை ஏன் எழுக்கிறீர்கள் //பாதிரிகள் சொல்வதைப் போல “கனடா” ஒன்றும் கிறிஸ்தவநாடு என்று எண்ணி அவல் இடிக்க தேவையில்லை!// எதையோ கேட்க எதற்கோ பதில் சொல்கிறீர்கள். கனடா கிறிஸ்தவ நாடல்ல 70வீதத்துக்கு மேற்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள்.
//நோர்வே, அமெரிகா பற்றிக் கதைக்காமல் இந்த நோபல் பரிசு பற்றி எழுதுவது கூடாது என்று சொல்லும் குசும்பு அது ஏன் என்று சொல்லக் காணோம்//
நந்தா எங்கு எந்த உலகத்தில் வாழ்கிறாரோ தெரியவில்லை. அமெரிக்காவுக்கும் நோபல்பரிசுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. நீங்கள் கூட யாரையும் முன்மொழியலாம். இந்த நோபல்பரிசுக்குழுவின் தலைவரானவர் ஒரு பக்கா இடதுசாரி என்பதை அறியமுடிந்தது. இதைவிட வேறு என்ன தகமை வேண்டும் ஒரு சீனனுக்கு பரிசளிக்க. இன்னும் நந்தா நான்கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லாது பின்நோட்டத்தை திசை திருப்பிக்கொண்டே போகிறார். லியூ என்ற சீனனுக்கு நோபல்பரிசு கொடுத்தது ஏன் பிழை என்று கூறுங்கள். அவருக்கு பரிசு கொடுத்ததற்கு ஏன் நீங்களும் சந்திரனும் துள்ளுகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.
சாந்தன்
//….கனடாவிலிருந்து ஆங்கிலம் படிப்பிக்க நூற்றுக் கணக்கில் கனடியர்கள் செல்கிறார்கள். ..//
இவ்வாறுதான் மிசனரிகளின் வேலை ஆரம்பமாகும். முதலில் ஆங்கிலம் படிப்பிக்கிறேன் எனச் செல்வார்கள். பின்னர் வைத்தியம் பின்னர் பைபிள். நீங்கள் ‘பாதிரிகளுக்கு’ எதிரக சொன்னவைதான் இவை. கசப்பானவை இப்போது இனிக்கிறதோ?
சரியான இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் நந்தா !
//…..அவர்கள் காணாதவைகளை இவர்கள் கண்டு விட்ட மர்மம்தான் புரியவில்லை…..//
ஆங்கிலம் படிப்பிக்கப்போனவர்களும் , மேற்குலகம் வந்த சீன மாணவர்களுமே சீனாவில் நடக்கும் விடயங்களை இவ்வாறு பொய்ப்பிரச்சாரம் செய்வதாக சீனா சொல்கிறதே கவனிக்கவில்லையா? மனித உரிமை மீறல்கலைப்பற்றிய முதல் அறிக்கைகள் தமக்கு இவ்வாறானவர்களின் மூலமே தமக்கு முதலில் தெரியவருவதாக மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றனவே அறியவில்லைப் போலும்?
santhanam
தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவி தீபெத் தனி நாடு (அல்லது) சுயாட்சி அந்தஸ்து வழங்க மாட்டோம். சீன அரசியலமைப்பு – ஒரு பார்வை. ஆனால் அருணாச்சல் பிரதேசம் எங்களுடையது என்போம். தனிநாடாக காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்தெடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். நிம்மதியாக இருந்த நேபாளத்தையும், நேபாளிகளையும் நாங்கள் இப்படித்தான் உறங்க விடாமல் செய்து விட்டோம். எங்கள் தூண்டுதலுடன் தான் மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவை ரணகளமாக்குகிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் எந்தப் புரட்சி வெடித்தாலும் அதை இரும்புக் கரம் கொண்டு டாங்கிகளுக்கு அடியில் போட்டு நசுக்குவோம்
santhanam
பல்கலைக் கழக முன்னாள் பேராசிரிய ரான லியூ ஷியாபோ கடந்த 1992-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்.
இதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப் பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தம் கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தண்டனை பெற்றவர்.
நந்தா
நேபாளத்து மாவோயிஸ்டுகளுக்கும், சீனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்ற விபரங்கள் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன என்பது சிலருக்குத் தெரியாது உள்ளது பரிதாபமாக உள்ளது.
புளட் இயக்கத்தை திருத்தப் புலிக்குப் போன சாந்தனின் கருத்துக்கள் புரியவில்லை!
கனடாவிலிருந்து ஆங்கிலம் படிப்பிக்க போகின்றவர்களால் சீனத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறாரா அல்லது முதலாளித்துவம் வந்துவிடும் என்று சந்தோஷப்படுகிறாரா?
குசும்புவுக்கு கனடாவின் அரசியல் அமைப்பு பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அது “முதலாளித்துவ”நாடு என்ற கணிப்பீடு மாத்திரம் வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஐ.நா.வின் “உரிமைகள் சாசனத்தை” அரசியல் அமைப்பில் சட்டமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடு கனடா மாத்திரமே என்பது பலருக்குப் புரிவதில்லை! கனடாவை பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து 1967இல் அகற்றிய பிரதமர் ட்ரூடோ புதிய அரசியல் அமைப்பில் இந்த “ஐ.நா. சாசனந்தையும்” சேர்த்துள்ளார்.
மனித உரிமை என்று குரலெளுப்பும் அமெரிக்கா,நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியநாடுகள் ஐ.நா.வின் உரிமைகள் சாசனத்தை எற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் அந்த நாடுகள்தான் மனித உரிமை என்று குரல் எழுப்பும் பிரதான கும்பல்கள். அந்தநாடுகள் “அரசியல்” நோக்கிலேயே மனித உரிமை பற்றி பேசுகிறார்கள். தங்களின் சுரண்டல்களுக்கு தடையாகவுள்ள நாடுகளில் மனித உரிமை போய்விட்டது என்ற கூச்சல் இடுவதும், பணமுடிப்புக்கள் கொடுத்து உள்னாட்டில் ஏதாவது கலவரம் செய்ய முடியுமா என்பதும் இந்த நாடுகளின் தந்திரோபாயங்கள்.
கனடா வருடத்துக்கு 250,000 மக்களை குடிவரவாளர்களாக ஏற்றுக் கொள்ளுகிறது. அதனால்த்தான் “கப்பல்”கள் ஏறி புலிக் கும்பல்களும் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் போகாமல் கனடாவுக்கு வந்திறங்குகிறார்கள். கிரிமினலாக இருந்தாலும் “அகதி” என்பவனை திருப்பி அனுப்பக் கூடாது என்பது “ஐ.நா. உரிமை சாசனத்தின் சரத்து.
சமாதானத்துக்கு பரிசு கொடுப்பவர்களின் நாட்டிலிருந்து பல தமிழர்கள் (கிரிமினல்கள்) சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள கதைகள் எங்களுக்குத் தெரியும்.
குசும்புவும், மற்றும் சிலரும் முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்குவதினால்த்தான் தமிழர்களை முதலாளித்துவ நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றன என்று இவர்கள் கருதினால் அதற்கு யார் பொறுப்பு?
சீனத்துக்கு தொழிலாளர்கள் தேவையில்லை. எனவே அங்கு யாரும் போவதில்லை. ஜீ-20நாடுகளில் கனடா மட்டுமே 2.5 லட்சம் குடிவரவாளர்களை அனுமதிக்கிறது. அரசியல் அகதிகளும் இந்த 2.5 லட்சம் மக்களில் அடங்குகிறார்கள்.
குசும்புவும், மற்றைய முதலாளித்துவ சினேகிகளும் நந்தா போன்ற சீன, இடதுசாரி, இந்து ஆதரவாளர்களை நாட்டுக்குள் விட வேண்டாம் என்று ஒரு பெட்டீசம் போட்டுப் பார்க்கலாம்!
நோபல் பரிசு கிடைத்துள்ள சீனப் பிரஜை எந்த “சமாதனம்” பற்றி போராடினார் என்பது இது வரையில் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் “சீன அரசுக்கு” எதிரான கிளர்ச்சிகளில் இறங்கி “சீனத்து” சமாதானத்தை குழப்ப முயன்றார் என்பது உண்மை. அதாவது சீன மக்களின் சமாதான வாழ்வை கெடுக்கப் புறப்பட்டவருக்கு “சமாதானத்துக்கான” பரிசு.
ஒஸ்லோவிலிருந்து வெளியாகும் இந்த நோபல் பரிசு சம்பந்தமான விபரங்கள் பற்றி நோக்கும் போது நோர்வே பற்றிப் பேசாமல் யார் பற்றி பேச முடியும்?
நோர்வேயும் சம்பந்தப்பட்டுள்ள நோபல் பரிசு விவகாரத்தில் கண்டிப்பாக நோர்வேகாரர்கள் இலங்கையில் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை பற்றி அக்கறை உள்ள எவனும் சாதாரணமாக சிந்தனை செய்யக் கூடியதே ஆகும்!
Kusumpu
சந்தானம். சுப்பராய் போட்டீங்க உண்மையில் மாவோவோ மாக்ஸ்சோ சொல்லவில்லை மற்ற நாடுகளை ஆக்கிரமி, அவர்களின் சொத்துகளைச் சுரடண்டு; அமைதியைக் குலை என்று, ஆனால் இந்த மாவோ மாக்சிஸடுக்களும் அதைப்பின்பற்றும் நாடுகளும் அடக்குமுறை, அயல்நாட்டுச்சுரண்டல்; மூலதனஅழிப்பு என்று சகலதையும் முதலாளித்துவத்தை விட மோசமாகச் செய்கிறார்கள். அமெரிக்காவின் பலவங்கிகள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எத்தனை பேர் அறிவர். இது மூலதன முடக்கலா? முதலாளித்துவப்பெருக்கலா? சரியான ஒர மாக்சிஸ் ஒருபோதும் ஆக்கிரமிப்பில் ஈடுபடமாட்டான். தனிமனிதனானாலும் சரி நாடானாலும் சரி.
சாந்தன் சொல்வதுபோல் இருப்புச்சிறைச்சீனாவில் இருந்து செய்திகள் இப்படியான மாணவர்கள் மூலமே வெளிவருகிறது. அது சீனச்சட்டிச் சீனாதான். அங்கே மாக்சிசமும் இல்லை மாவோ இதமும் இல்லை. இருப்பது வெறும் சர்வாதிகாரமே.
BC
//October 13, 2010 பல்கலைக் கழக முன்னாள் பேராசிரிய ரான லியூ ஷியாபோ கடந்த 1992-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப் பட்டது. //
சந்தனம் இப்போ என்ன சொல்ல வருகிறார்?
மனித உரிமைகளுக்காக போராடிய இந்த சிறந்த மனிதனுக்கு நோபல் பரிசு கொடுத்ததிற்க்கு சந்தனம் பின்வருமாறு கூறுகிறார்.
October 12, 2010 அமைதிக்கான சமாதானவிருது இப்போது ஏகாதிபத்திய முதலாலிவர்க்கத்தின் சுயநலத்தன்மையுடன் பிரேரிக்கபடுகிற விருதாகமாறியுள்ளது. சனநாயகம் படுமுட்டாள்களின் மேடை.
santhanam
முரண்பட்ட இரு கூறுகளாக நான் பார்க்கிறேன். அமெரிக்காவில் கிறிமினல் குற்றத்திற்கு நஞ்சூட்டுகிறார்கள் சீனாவில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கியால் சுடுகிறார்கள். இதில் யார் மனிதஉரிமை வாதிகள்.
மருது
உங்களுக்கு இலங்கையே புரியவில்லை. அதற்குள் சீனா பற்றி துவங்கி யாரை மகிழ்விக்கப் போகிறீர்கள்?// 21வருடம் கனடாவில் வாழும் நந்தாவுக்கு இலங்கை பற்றித் தெரியுமாம். ஆயுதப்போர் உக்கிரம் பெறுமுன்னரே மடித்துக் கட்டிக்கொண்டு ஓடிவந்து விட்டார். கடசிவரையும் மக்களுக்காக புலிகளை எதிர்த்து நின்று அடிபட்டவர்கள் நாங்கள். எங்களுக்கும் இசங்களும் நிசங்களும் தெரியும் நந்தா. இந்த இசங்களை வைத்துத்தான் இளசுகளைத் தூண்டி விட்டு இறுதியில் முள்ளிவாய்கால் கிடைத்தது.
palli
//முரண்பட்ட இரு கூறுகளாக நான் பார்க்கிறேன். அமெரிக்காவில் கிறிமினல் குற்றத்திற்கு நஞ்சூட்டுகிறார்கள் சீனாவில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கியால் சுடுகிறார்கள். இதில் யார் மனிதஉரிமை வாதிகள்.//
இதுக்கான விடை கிடைக்கும்போது இந்த வாதத்துக்கு முற்று புள்ளி வைக்கலாம்;
சாந்தன்
//…புளட் இயக்கத்தை திருத்தப் புலிக்குப் போன சாந்தனின் கருத்துக்கள் புரியவில்லை!…//
மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களின் ‘சேம் சைற் கோல்’ போட்டது விளங்கும். ஆங்கிலம், வைத்தியம், பைபிள்…பாதிரி லிங்க். எல்லாம் நீங்கள் சொன்னதுதான்!
Kusumpu
//அமெரிக்காவில் கிறிமினல் குற்றத்திற்கு நஞ்சூட்டுகிறார்கள் //
சந்தானம் இது குற்றம் என்று நீதிமன்றம் தீர்மானித்து தூக்குத்தண்டனை விதித்தவனுக்கே நஞ்சூட்டப்படுகிறது. சித்திரவதை இன்றிச் சாகட்டும் என்பதற்காக. சீனாவில் அப்படி இல்ல பேசினாலே சித்திரவதை அதைக்கேட்டால் தலைமறைவு. எந்தப்பலாற்காரமும் இன்றி போராடிய லியூவுக்கு அதுவும் சீனச்சட்டத்தை நடைமுறைப்படுத்து என்று கேட்ட லியூவுக்கு இப்படித்தண்டனை. இந்தச்சீனாவுக்கு பரிந்துரைகள் வக்காளத்துகள் வேறு.
Kusumpu
//மனித உரிமை என்று குரலெளுப்பும் அமெரிக்காஇநோர்வேஇ பிரிட்டன்இ பிரான்ஸ் ஆகியநாடுகள் ஐ.நா.வின் உரிமைகள் சாசனத்தை எற்றுக் கொள்ளவில்லை. //
அதை ஏற்காமல்தான் இன்நாடுகள் ஐ.நா இல் அங்கம் வகிக்கின்றனவாக்கும். விரோ பவர் உள்ள 3 நாடுகள் அங்கிகரிக்கவில்லை என்றால் ஐநா எதற்கு?
//நேபாளத்து மாவோயிஸ்டுகளுக்கும்இ சீனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்ற விபரங்கள் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன //
ஆனால் மாவேயிஸ்டுக்கள் என்று தான் பெயவைத்தார்களோ?
//கனடா வருடத்துக்கு 250இ000 மக்களை குடிவரவாளர்களாக ஏற்றுக் கொள்ளுகிறது. அதனால்த்தான் “கப்பல்”கள் ஏறி புலிக் கும்பல்களும் அமெரிக்காவுக்கும்இ பிரிட்டனுக்கும் போகாமல் கனடாவுக்கு வந்திறங்குகிறார்கள். கிரிமினலாக இருந்தாலும் “அகதி” என்பவனை திருப்பி அனுப்பக் கூடாது என்பது “ஐ.நா. உரிமை சாசனத்தின் சரத்து// உங்கள் கனடாதான் அகதிகளை ஏற்றார்கள் மற்றநாடுகள் கடலுக்குள் கொட்டினார்களா? கனடா எந்த அகதிகளையும் அனுப்பவில்லை என்று அடித்துச் சொல்வீர்களானால் உங்களுக்குக் கனடாபற்றிய அறிவில்லை என்பது உறுதி.
/சமாதானத்துக்கு பரிசு கொடுப்பவர்களின் நாட்டிலிருந்து பல தமிழர்கள் (கிரிமினல்கள்) சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள கதைகள் எங்களுக்குத் தெரியும்/
அப்படி பலதமிழர்கள் கிறிமினல் என்று உரைப்பதே கிரிமினல்தனமானது. நாடுகடத்துவது என்பது உங்கள் ஆங்கித்தின் சொன்னால் எக்சீல் என்பர். திருப்பி அனுப்புவது எக்சீல் இல்லை நந்தா. கிரிமில்களை நாட்டுக்கள் வைத்து நாடகமாடச் சொல்கிறீர்களா. நோர்வே அல்கைடாவுடன் தொடர்புடைய நிரூபிக்கப்பட்ட ஒரு முஸ்லீமையே ஈராக்குக்கு அனுப்பமுடியாமல் திட்டாடுவது நந்தாவுக்குத் தெரியவில்லைப்போலும்.
//குசும்புவும்இ மற்றைய முதலாளித்துவ சினேகிகளும் நந்தா போன்ற சீனஇ இடதுசாரிஇ இந்து ஆதரவாளர்களை நாட்டுக்குள் விட வேண்டாம் என்று ஒரு பெட்டீசம் போட்டுப் பார்க்கலாம்// வளமையான தமிழ்புத்தி வந்துவிட்டதே. அதுதான் பெட்டிசப்புத்தி. அது என்ன இடதுசாரி இந்து. இடதுசாரிக்கோ மதம் இல்லை மதம் அபினைப்போன்றது என்றார்கள். இது என்ன புதிய இடதுசாரி இந்து. மதம் என்றுவந்தாலே வலதுசாரிகளல்லவா. நந்தா என்ன வலப்பக்கம் தாவுகிற பிளானோ? வேண்டாம் எங்கடை பக்கம் வேண்டாம்.
//நோபல் பரிசு கிடைத்துள்ள சீனப் பிரஜை எந்த “சமாதனம்” பற்றி போராடினார் என்பது இது வரையில் யாருக்கும் தெரியாது// கட்டுரையில் நோபல்பரிசுக்கான காரணம் சந்தானம் கூடப் பின்நோட்டத்தில் எழுதியுள்ளார்.
நந்தா நீங்கள் எப்படிக் குத்தி முறிஞ்சாலும் நோபல் எழுதிவைத்த உயிலை வைத்தே பரிசு யாருக்கென்று தீர்மானிக்கப்படுகிறது. நோர்வே புலிகளுக்கு ஆதரவு என்பது வெளிவேடமே தவிர இறுதியில் தமிழ்செல்வன் பேச்சுவார்த்தையை முற்றுச்செய்ய வந்தபோது சிங்கள அரசினரை பின்வழியால் கொண்டுவந்து பேச்சுவார்த்தை என்று நோர்வே அமர்த்தியதாம் கேள்விப்படவில்லையா. இதனால்தான் தமிழ்செல்வன் குழு எழுந்து போனதாம். நோர்வே அனுரசணையாளர்கள் என்ற சொல்லை சரியாப்பாருங்கள். பேச்சுவார்த்தைக்கு அனுசரணையே தவிர புலிகளுக்கோ அரசுக்கோ அல்ல. அனுரசணையாளன் என்பவன் இருபக்கம் சார்பாக இருப்பவன். இதை நோர்வே சரிவரச்செய்துள்ளது என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை. இறுதிவரை புலிகளுடனும் இலங்கை அரசுடனும் இராஜதந்திரத் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்பதை நந்தா மறக்காது எழுந்தமானமாக எழுதாமல் இருப்பதுவும் அவசியம்.
நந்தா
நாங்கள் ஒடியதால் உயிரோடு இருக்கிறோம். அது என்ன “ஆயுதப் போராட்டம்”? அமெரிக்க/பிரிடிஷ் கூலிகள் இலங்கயில் தொடங்கிய “காடைத்தனத்துக்கு” ஆயுதப் போராட்டம் என்று அழகான பெயர்!
மக்களுக்காக புலிகளை எதிர்த்த மாதிரி எழுத்துக்களில் எதையும் காணவில்லையே!
குசும்புவின் கருத்தில் அமெரிக்கா “சுரண்டல்” செய்யாத நாடு! ஆகா! சீனாதான் ஆபிரிக்க, ஆசியநாடுகளை காலனியாக வைத்திருந்து சுரண்டல் செய்து “வட்டிக்கு” விடுகிறது என்று அடுத்து எல்லோரையும் அசத்தப் போகிறார்!
maruthu
//இதுக்கான விடை கிடைக்கும்போது இந்த வாதத்துக்கு முற்று புள்ளி வைக்கலாம்// பல்லி அப்போ வாதம் முடியாது என்று நினைக்க வேண்டியதுதான். காரணம் வாதம் பிடிவாதமாகி விட்டதே.
Kusumpu
நந்தா //நாங்கள் ஒடியதால் உயிரோடு இருக்கிறோம். அது என்ன “ஆயுதப் போராட்டம்” வாழ ஆசை. இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்கு கீபோட் மாக்சிசம். எழுத்தில் காணோம் என்றால் செயல்கள் எல்லாம் எழுத்தல்ல. நாங்கள் உங்களைப்போல் தட்டெழுத்து மாக்சிஸ்டுக்கள் அல்ல.
//குசும்புவின் கருத்தில் அமெரிக்கா “சுரண்டல்” செய்யாத நாடு! ஆகா! சீனாதான் ஆபிரிக்கஇ ஆசியநாடுகளை காலனியாக வைத்திருந்து சுரண்டல் செய்து “வட்டிக்கு” விடுகிறது என்று அடுத்து எல்லோரையும் அசத்தப் போகிறார்//
இதை சரியாகக் கவனியுங்கள. நீங்களும் புலிகளும் எந்தவிதத்திலும் மாறபட்டவர்கள் அல்ல. இது அல்லது அது. மாக்சிசம் இல்லையேல் முதலாளித்துவம். துரோகி அல்லது புலி எங்காவது அமெரிக்கா சுரண்டவில்லை என்று நான் எழுதினேனா? எதை எடுத்தாலும் அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறீர்கள். வாத்தி நாகராஜாவின் நண்பர் என்கிறீர்கள். வாத்தி என்ன சுமந்து திரிந்தவர் என்பது கூடவா தெரியவில்லை. புலிகளின் துப்பாக்கிகளால் வாயடைக்கப்பட்ட மக்களில் நானும் ஒருவனாக இருந்தாலும் எனது செய்பாடுகள் என் மக்களுடன் மக்களுக்காக மக்களை நோக்கி இருந்தது. தொடர்ந்தும் இருக்கும் நான் தட்டெழுத்து மாக்சிஸ் அல்ல.
நாங்கள் சீனாவைப்பற்றி விமர்சிக்கிறோம் என்றால் அமெரிக்க ஆதரிவாளர்கள் என்று எடைபோடுவது குழந்தைப் பிள்ளைத்தனமானது. //அமெரிக்க/பிரிடிஷ் கூலிகள் இலங்கயில் தொடங்கிய “காடைத்தனத்துக்கு” ஆயுதப் போராட்டம் என்று அழகான பெயர்// இந்தவரிகளில் இருந்து நந்தாவின் வரலாற்றுக் கூர்மையும் எதையும் தூர இருந்தே பார்க்கும் தன்மையும் தெரிகிறது. நந்தா அருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லோம் பேய்தான். இன்று ஐரொப்பாவிலோ அமெரிக்கக் கண்டத்திலோ சீனனின் பொருட்களைக் காணலாம். ஒரே வகையான பொரும் 3விதமான தரங்களில் 3விதமான விலைகளில். இது தான் மாவோ சொல்லிச்சென்ற மாவோ இச வியாபாரமா. தொழிலாளர்களுக்கு தரம்குறைந்த பொருள்? சரியான ஒரு இடதுசாரி சீனாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மதிப்பிடுவானாயின் சீனா ஒரு படுபோக்கிலித்தனமான முதலாளி என்பது தெரியவரும். உங்கள் பண்டைய மாக்சிசப்படி நிலப்பிரபு எனலாம். ஆதாரங்கள் பலஉண்டு. மாவோயிசம் போதிப்பவர்களும் கிறிஸ்தவ மதப்பிரிவுகளாய் வீடுவீடாய் திரியும் மதப்போதர்களுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது. இது நந்தாவுக்கும் நன்றாகபே பொருந்தும். அவர்கள் செய்யும் அதே வேலையைத்தான் இந்த மாவேமாக்சிஸ்டுக்கள் செய்கிறார்கள். இவர்களின் முதலாளியான சீனாவே ஆயுதங்களால் ஆக்கிரமிப்பும்; முதலீடுகாளல் முதலாளித்துவமும் கொண்டு திரிகிறது.
நந்தா
தட்டெழுத்து மாக்சிஸிஸ்ட்டுக்கள் நாங்களென்றால் குசும்பு என்ன அமெரிக்க மார்க்சிஸ்டா? அமெரிக்க கூலிகள் இலங்கையை நாசமாக்கினார்கள். அதனைக் கண்டு பிடிக்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முயற்சிக்காமல் முதலாளித்துவம், அமெரிக்கா என்று பசப்பல்கள் எழுதி இலங்கையிலுள்ள மக்களுக்கு முள்ளிவாய்க்கால்த்தான் ஒரே ஒரு மார்க்கம் என்கிறார்.
இவர்கள் இன்னமும் “எதுவும்” செய்யாத இலங்கை மார்க்சிஸ்ட்டுக்களை புலிகள் எதற்காக கொன்றார்கள் என்று எழுதக் காணோம்.
புலிகள் “யாருடைய” படை என்று இன்னமும் கண்டு பிடிக்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருக்கும் பல்லி, குசும்பு போன்றவர்கள் “மக்களுடன்” என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதையும் சொன்னால் நல்லது.
வாத்தி நாகராஜா பாடசாலை நண்பனே தவிர அரசியலில் நண்பன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. அதே போல பல இயக்கத்தவர்களும் எனக்கு இன்றும் நண்பர்கள். அதாவது மனம் விட்டுப் பேசுபவர்கள். “நட்பு” என்பதனையும் “பங்கு வியாபாரத்தையும்” போட்டுக் குழம்பி உள்ள குசும்புகள் அரசியலில் முதலாளித்துவ வக்காலத்துக்களாக மாறி புலிகளின் எச்சங்களாகவே மாறியுள்ளனர்.
சீன உற்பத்திகளை விற்றுக் காசாக்குபவர்கள் பற்றி குசும்பு பேசியிருந்தால் சந்தோஷப்படலாம். சீனநிறுவனங்கள் எதுவும் ஐரோப்பாவில் கடை விரிக்கவில்லை.
மார்க்சிசம் “வர்த்தகம்” செய்வதை தடை செய்யவில்லை. மார்க்சிசம் மக்கள் மண்வெட்டியுடனும், அருவாளுடனும் அலைய வேண்டும் என்று போதிக்கவில்லை. சில வேளைகளில் மார்க்சிசம் பேசுபவன் “பிச்சை” எடுப்பவனாக இருக்க வேண்டும் குசும்பு புதிய சித்தாந்தம் பண்ணுகிறாரா?
சீனாவிடம் பொருள்களுக்கு இன்று மண்டியிடுபவர்கள் குசும்புவின் முதலாளிகள் என்பதை கண்டு பிடிக்காமல் அமெரிக்க பாதிரி கதைகளை எடுத்துப் பயன் கிடையாது. அமெரிக்க முதலாளிகள் கொள்ளையடிபதிலும், கொலை செய்வதிலும் பொருளீட்டலாம் என்று அலைகிறார்கள். சீனர்கள் உழைப்பு மூலம் வாழலாம் என்று நிரூபித்துள்ளனர்.
சீனாவின் வெளினாட்டுக் கொள்கைகள் முதலாளித்துவக் கூலிகளுக்கு எப்பொழுதும் கசப்பானவையே! குசும்பு கண்ட “போக்கிலித்தனங்களை” சொன்னால் நல்லது.
நந்தா
மார்க்சிசம் மக்களின் கலாச்சார விழுமியங்களை கொச்சைப் படுத்துவதில்லை. தமிழரின் கலாச்சார விழுமியங்கள் இந்து, பவுத்த மதங்களோடு சம்பந்தப்பட்டவை. சீனாவில் பவுத்த கோவில்களை கம்யூனிஸ்டுகள் உடைத்துத் தரை மட்டமாக்கவில்லை. ஆனால் இலங்கயில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அந்தநாட்டு மக்களின் கலாச்சார சின்னங்களை அழித்து கொள்ளையடித்திருக்கிறார்கள்.
இலங்கயில் அல்லது இந்தியாவில் உள்ள மக்களின் கலாச்சார நம்பிக்கைகள் மார்க்சிசத்துக்குத் தடையானவை அல்ல!
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் கோவிலில் ஐயராக இருந்த ஒருவர் கம்யூனிஸ்டாகவும் இருந்து கல்லெறிபட்ட வரலாறுகள் உண்டு.
இந்துக்களும், பவுத்தர்களும் “பொருள்” திரட்டும் பேராசையை கண்டிக்கும் மதங்கள். மற்றவர்கள் “பொருள்” ஈட்டும் வேதாந்த வாதிகள். இன்று கிறிஸ்தவ/கத்தோலிக்கர்கள் இந்துக்களையும், பவுத்தர்களையும் மதம் மாற்றினால் “மார்க்சிசம்” நிறுத்தப்படும் என்று நம்புகிறார்கள். புலிகளுடன் பாதிரிகள் அடித்த கொட்டத்தின் மூல காரணமே அதுதான்! முதலாளித்துவத்தின் எடுபிடிகளாக கிறிஸ்தவ/முச்லிம்கள் இயங்குவதும் கொலை கொள்ளைகளை மக்கள் மீது ஏவி விடுவதும் மார்க்சிஸம் மீதுள்ள பயப் பிராந்தி காரணமாகவே என்பது சம்பவங்கள் காட்டும் உண்மை!
palli
//கத்தோலிக்கர்கள் இந்துக்களையும், பவுத்தர்களையும் மதம் மாற்றினால் “மார்க்சிசம்” நிறுத்தப்படும் என்று நம்புகிறார்கள்.//
அவர்கள் நீங்கள் மாறுவதா?? அப்படி என்ன கடத்திகொண்டுபோய் மாற்றுகிறார்களா?? இவர்கள் ஏன் மாறுகிறார்கள் என எப்போவாவது மாறியவர்களிடம் கேட்டதுண்டோ?? சரி உங்களை யாரும் ஏன் கனடா போன்னீர்கள் என கேட்டால் உங்கள் பதில் என்ன? அல்லது இனிமேலாவது மாறுபவர்கள் மாறாமல் இருக்க உங்கள் சேவைதான் என்ன?? அதுசரி நந்தா மார்க்ச்சிசம் இலங்கையில் உருவானதா அல்லது வேறு நாட்டில் உருவானதா?? இல்லை உங்களுக்குதான் அயல் நாட்டு சமாசாரமோ அல்லது உலக நாட்டு நடப்புகள் பிடிக்காதே; ஆனால் மார்க்ச்சிசம் பிடிப்பதால் அது மகஜனாவில் தொடங்கி இருக்குமோ என இந்த பல்லி நினைக்கலாமல்லவா?உங்களுக்கு பிடிக்காத விடயங்களை மற்றவர்களுக்கும் பிடிக்ககூடாது என்பது சரியான வாதம் அல்ல, அதனால் வரும் தீங்குகள் நன்மைகளை சொல்லுங்கள் . அதை விட்டு நாட்டாண்மை செய்யலாம்மோ;
நீங்கள் கனடாவில் இருந்து கொண்டு இன்று கனடா வருவோரை கேலி செய்வது எந்த வகையில் நியாயம்; அவர்கள் வருவதால் உங்களுக்கு என்ன குறைந்து போகுது; உங்களுக்கு புத்தமதம் பிடிக்கலாம் ஆனால் மற்ற யாருக்கும் எதுவும் பிடிக்க படாதா?? ஒரு புதுமுகம் ஒரு கவிதை சொல்லியுள்ளார் அதை படியுங்கள். உங்கள் நேரம் மற்றவர்களுக்கு இலவச பட்டம் கொடுப்பதிலேயே
போய் விடுகிறது, அதனால் இனி வரும் காலங்களில் சிறிது கருத்தும் எழுதவும், இயக்கம் எதுவும் பிடிக்காது அவர்கள் கடத்தல் கொலை காரர்; ஆனால் நாகராசா மட்டும் எனது நண்பர் என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது, நாகராசாவுக்கு நாரதர் எனவும் ஒரு செல்ல பெயர் உண்டு; நந்தா தேசத்தில் கருத்து எழுதும் பலர் ஆரம்ப காலத்தில் அமைப்புகளில் இருந்தவர்கள்தான்; இதில் மாயா, குசும்பு; சாந்தன், சந்திரராஜா, சோதி, ரகு என பலர். சிலர் தம்மை அடையாள படுத்தியும் உள்ளனர், (பல்லி அப்படி இல்லை பலராலும் பாரபட்சமின்றி தண்டனை மட்டுமே பெற்றேன்; காரணம் என் எழுத்தில் தெரியுமே) அதனால் நீங்கள் உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் ,நீங்கள் மட்டுமே சீர்சிருத்தவாதி, மார்க்ச்சியவாதி; பொதுவுடமைவாதி என வாதிடுவது நல்லதல்ல,
//யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் கோவிலில் ஐயராக இருந்த ஒருவர் கம்யூனிஸ்டாகவும் இருந்து கல்லெறிபட்ட வரலாறுகள் உண்டு. //ஜயர் இருந்துட்டு போகட்டும்; நீங்கள் இருந்தீர்களா?? அப்படியாயின் அதன் அருமை பெருமைகளை சொல்லுங்க;
//முதலாளித்துவத்தின் எடுபிடிகளாக கிறிஸ்தவ/முச்லிம்கள் இயங்குவதும் //
ஆனால் நாலு வல்லரசுகள் சேர்ந்துதானே ஈராக்கை அழித்தார்கள்? ஈராக்கில் இருந்தவர்கள் இந்துக்களா? அல்லது மார்க்ஸ்ஸியவாதிகளா?? குளப்புறியள் நந்தா,
//மார்க்சிசம் மக்களின் கலாச்சார விழுமியங்களை கொச்சைப் படுத்துவதில்லை.//
இந்த குகநாதன் கடத்தல் சமாசாரம் நந்தாவுக்கு தெரியாதா என்ன இடைக்கிடை படியுங்க தமிழரங்கம்;
//சீனாவில் பவுத்த கோவில்களை கம்யூனிஸ்டுகள் உடைத்துத் தரை மட்டமாக்கவில்லை. //
ஆனால் பல தொழிலாளர் வாழ்க்கையை இடித்து சமாதி கட்டிவிட்டனர் என்பதுதான் எமது வாதம்;
//ஆனால் இலங்கயில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அந்தநாட்டு மக்களின் கலாச்சார சின்னங்களை அழித்து கொள்ளையடித்திருக்கிறார்கள். //
அந்த கடனைதான் இப்போது பல நாடுகளில் நம்மவர் ஏதோ காட்டால் கொள்ளை அடிப்பதாக சொல்லுகிறார்களே; ஊருக்குதான் உபதேசமோ ;
//இலங்கயில் அல்லது இந்தியாவில் உள்ள மக்களின் கலாச்சார நம்பிக்கைகள் மார்க்சிசத்துக்குத் தடையானவை அல்ல!/உன்மைதான் அவர்கள் வாழ்வுக்குதான் இவர்கள் மூடகொள்கைகள் தடையென குசும்பு விளக்கம் தருகிறார்,
நாங்கள் என்றுமே மார்க்ச்சியத்துக்கு எதிரானவர்கள் அல்ல; மக்களுக்கு ஆதரவும் போலிகளை விமர்சிப்பவர்களுமே,
Kusumpu
நந்தா //குசும்பு என்ன அமெரிக்க மார்க்சிஸ்டா?// அமெரிக்காவை முதலாளி முதலாளி என்று கூறும் நந்தா அமெரிக்காவில் மார்க்சிஸ்டுகள் உண்டு என்பதை ஒத்துக்கொண்டாரே அப்பாடா. இது போதும்.
//முதலாளித்துவம்இ அமெரிக்கா என்று பசப்பல்கள் எழுதி இலங்கையிலுள்ள மக்களுக்கு முள்ளிவாய்க்கால்த்தான் ஒரே ஒரு மார்க்கம் என்கிறார்// நீங்கள் நினைக்கிறதை என் தலையில் போட முயற்சியாதீர்கள். ஏன் நான எழுதாததை எழுதியது என்று பசப்புகிறீர்கள். எங்கே நான் எழுதினேன் முள்ளிவாய்க்கால்தான் மார்க்கம் என்று? முடிந்தால் நான் எழுதியதை இங்கே போடுங்கள்.
//எதுவும்” செய்யாத இலங்கை மார்க்சிஸ்ட்டுக்களை புலிகள் எதற்காக கொன்றார்கள் என்று எழுதக் காணோம்// இதற்குப் பதில் சொல்லவேண்டியது குசும்பில்லை. புலிகள். புலிகள் முதலாளி எண்ணம் கொண்ட வளர்த்து விட்டுவர்களையே சுட்டிருக்கிறார்கள். இதற்கு நந்தாவா பதில் சொல்வது? கேட்கவேண்டியவர்கள் எங்கேயோ இருக்க என்னிடம் கேட்கிறீர்கள்.
/வாத்தி நாகராஜா பாடசாலை நண்பனே தவிர அரசியலில் நண்பன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை./ அவரிடன் புத்தகங்கள் வாங்கிப்படித்ததாகத் தாங்கள் குறிப்பிட்ட ஞாபகம்.
/சீனநிறுவனங்கள் எதுவும் ஐரோப்பாவில் கடை விரிக்கவில்லை/ இது தவறானது கடையைத்திறந்து விட்டுள்ளார்கள் சீனாவில் கடைபோடுவதற்கு. மேற்குலகுடன் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டது நந்தாவுக்கு ஏன் தெரியாமல் போனது?
//அமெரிக்க முதலாளிகள் கொள்ளையடிபதிலும்இ கொலை செய்வதிலும் பொருளீட்டலாம் என்று அலைகிறார்கள்.// நந்தா சீனா எந்தவிதத்திலும் அமெரிக்காவை விட திறமானவர்கள் அல்ல. ஏகே 47 ஐ கலஸ்நிக்கோ என்பர். இதை கண்டுவிடித்துவர்கள் ரஸ்சியர்கள். இதைத்தயாரிப்பதற்கு லைசென்சுகள் இடதுசாரி நாடுகளுக்கே வளங்கப்பட்டிருக்கிறது. புலிகளின் பட்டாளம் கொண்டு திரிந்ததே இதைத்தான். இறுதியில் விழுந்த புலிகளின் விமானம் சிஎன்-32 அன்றைய செக்கிய (இடதுசாரித்துவ)நாட்டின் தயாரிப்பு. இடதுசாரிகளுக்கு வெள்ளை பூசமுன் ஊத்தைகளை உரஞ்சுவது முக்கியம் இல்லை என்றுல் அவை வெள்ளை அடித்தபின்பும் வெளியில் தெரியும். இடதுசாரிகளின் போலித்தனங்கள் ஏற்கனபே எழுதப்பட்டன: சீனாவினதும் கூட.
Kusumpu
//சந்திரா இதில் மாற்று கருத்து இருக்கமுடியாவிட்டாலும் இன்று அந்த மார்க்ச்சியத்தை போதிப்பவர்கள் அல்லது நடைமுறை படுத்துபவர்கள் போகும் வழி அல்லது அணுகுமுறை சரியானதா? அதில் உள்ள தவறுகளையே நாம் சுட்டி காட்டுகிறோம்; புலிகளிலும் மார்க்ச்சியவாதிகள் இருந்தார்கள் என சொல்லுகிறார்கள்.இது கால்மார்க்ச் மீது நாம் செய்யும் விமர்சனமல்ல(அதுக்கு சில வேட்டை;;; உண்டு) அவர்கள் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் அரசியல் அல்லது தனிநபர்கள் மீது நாம் சொல்லும் அல்லது வைக்கும் குற்றங்களே; சரியான மார்க்ச்சியத்தை நீங்கள் எழுதினால் உங்களுக்கு எதிரிகள் நாம் அல்ல இன்றய மார்க்ச்சிய வாதிகளே என்பதுவே என் கருத்து;//
பல்லி- அதைத்தானே நாங்கள் பக்கம் பக்கமாக எழுதினோம். இது இவர்களுக்கு விளங்கப்போவதில்லை. நாங்கள் மாக்சிச எதிர்புவாதிகள் அல்ல ஆனால் புதியனவற்றையும் சரியெனப்படுவனவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். விமானம் கண்டுவிடித்தபின்பும் சீனாவுக்கு வண்டில் மாட்டில்தான் போகவேண்டும் என்று அடப்பிடித்தால் என்ன செய்வது. ஜனநாயகம் அனைவருக்கும் இடந்தருகிறது. தேர்தலில் நில்லுங்கள் மக்களை மாற்றுங்கள் தொழிலாளர்களைத் திட்டுங்கள் யார் மறுத்தார். உலகிலேயே 98சதவீதமானவர்கள் தொழிலாளர்களே. அப்படியிருந்தும் தொழிலாளர்களை இடதுசாரிகளால் திரட்ட முடியவில்லை என்றால் இது இடதுசாரிகளின் கையாலாகாத தனம்தானே.
நந்தா
இராகுல சாங்கிருத்தியாயனின் புத்தகங்கள் பற்றிய குறிப்பில் வந்த நாகராஜாவை குசும்பு இப்போது புரட்டுகிறார். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு! முள்ளிவாய்க்காலுக்குப் போய் சமாதியானவர்களும் அமெரிக்கா வரும் என்றுதான் அண்ணாந்து நின்றார்கள். குசும்புவும் அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று பிரசங்கம். இது போதாதா முள்ளிவாய்க்காலுக்கு வழி காட்ட?
குசும்புவின் முதலாளிகள் சாமான் வாங்க சீனாவுக்கு ஓடுவது குசும்புவுக்கு அவமானமாகப் படவில்லையோ? சில வேளைகளில் அமெரிக்க வெள்ளை முதலாளிகளிடம் சாமான் வாங்கினாலத்தான் தமிழர்கள் உருப்படுவார்கள் என்று குசும்பு வியாக்கியானம் செய்கிறார் போலத் தெரிகிறது. அமெரிக்காவும் ஏகே47ஐ தயாரிக்கிறது என்பதும் அதனை புலிகளுக்காக வாங்கப் போன தமிழ் கனடியர்கள் கம்பி எண்ணுவதும் குசும்புவுக்குத் தெரியவில்லை.
ஆயுத விற்பனையில் இன்று முன்னணி வகிப்பவர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ்,நோர்வே,சுவீடன் என்பனவே. பல மேற்குநாடுகளுக்குப் பின்னரே சீனா வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில்த்தானே “கம்யூனிசம்” எப்பொழுதோ காணாமல் போய்விட்டது. பின்னர் எப்படி இந்த விமானம் “கம்யூனிஸ்ட்டாகியது”? குசும்பு பழைய அமெரிக்கன் புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது தெரிகிறது!
சாந்தன்
/…/சீனாவில் பவுத்த கோவில்களை கம்யூனிஸ்டுகள் உடைத்துத் தரை மட்டமாக்கவில்லை. //
திபெத்தில் எத்தனை புத்த பிக்குகள் (ஸ்ரீலங்காப் பிக்குகள் அல்ல) கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் நாடுகடத்தப்பட்டனர் போன்ற விபரங்கள் எழுதி எழுதி கைவலித்ததுதான் மிச்சம். நித்திரை கொள்பவனை எழுப்பலாம் ஆனால்….
”முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்” திட்டத்தில் (மண்வெட்டியுடனும், அருவாளுடனும் அலைய வேண்டும் எனக் கடாயப்படுத்தப்பட்டார்கள்)ஏறத்தாழ 1.2 மில்லியன் (120 லட்சம்) திபெத்தியர்கள் பாதிக்கப்பட்டனர். சீனர்களின் கணக்கு 50 – 60 மில்லியன் வரை வரும் என்கின்றனர்.
palli
//மேற்குநாடுகளுக்குப் பின்னரே சீனா வருகிறது.//
முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ வருகுதுதானே; பின்பு எதுக்கு வியாகினம்; வர முடிவெடுத்தபின் பின்னுக்கு வருவது ஏலாமை;
நந்தா
சீனாவில் பவுத்த கோவில்களை உடைக்கவில்லை என்பது உண்மை. ஆனால் கத்தொலிக்கர்கள் எங்களுடைய நாடுகளில் இந்து/பவுத்த கோவில்களை தரை மட்டமாக்கியுள்ளனர்.
அதைப்பற்றி கதைக்கமல் திபேத் பற்றிய புரட்டுப் புராணத்தை வாசித்து என்ன பிரயோசனம்?
புத்த மதம் பற்றி விளாசித்தள்ளுபவர்கள் இந்த “லாமாக்கள்” எப்படி “அரசர்களாக” முடிந்தது என்பது பற்றி மவுனம். இலங்கையில் உள்ள புத்த மதம் பற்றி வாய் கிழிய பேசியவர்கள் இந்த லாமாக்கள் “சகல” சவ்பாக்கியங்களும், அரசு அதிகாரங்களுடனும் “ஆட்சி” நடத்திய கேடு கெட்டவர்கள் என்பதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்து கொண்டு சீனா பற்றிய அமெரிக்க புராணம் பாடுவது ஏனோ?
பல்லி அமெரிக்கனின் மிகப் பெரிய ஆயுத வியாபரத்தை கண்டிக்கவில்லை. சீனா தற்பாதுகாப்புக்கும், தனது உறவுநாடுகளின் பாதுகாப்புக்கும் ஆயுத உற்பத்தி செய்யும் உரிமை உள்ளது. சீனா ஆயுத உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பது இயலாமை அல்ல ஆனால் சீனாவுக்கு உள்ள சமாதானம் பற்றிய அக்கறையே என்பது பல்லிக்கு புரியவில்லை!
மனித உரிமை, சமாதானம் பற்றி நாள் தோறும் புரட்டல் விடும் மேற்குநாடுகள் மக்களை கொல்வதற்கும், தங்களின் ஆயுதங்களைக் காசாக்குவதற்கும் அலைகிறார்கள்.
Kusumpu
//முள்ளிவாய்க்காலுக்குப் போய் சமாதியானவர்களும் அமெரிக்கா வரும் என்றுதான் அண்ணாந்து நின்றார்கள். குசும்புவும் அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று பிரசங்கம்// எங்கே எப்போ? என்னையும் புலிகளையும் ஒப்பிட்டு மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுவது நானல்ல நந்தா நீங்கள் தான்.
//குசும்புவின் முதலாளிகள் சாமான் வாங்க சீனாவுக்கு ஓடுவது குசும்புவுக்கு அவமானமாகப் படவில்லையோ?// சீனாவையே திறந்து கடைவிடித்தது வெளிநாடுகளல்ல சீனாதான். வெளிநாடுகளின் உற்பத்தியால் வளியசுத்தத்தை அனுபவிப்பது சீனத் தொழிலாளர்கள். சீனத்தித்தாந்தத்தை வாசிப்பவர்கள் அங்குதான் உங்களால் வாழமுடியவில்லை ஒருதரம் சீனத்தலைநகருக்குப்போய் காலையில் சுவாசிக்கமுடியாது அந்தரப்படும் மக்களைப்பாருங்கள். பலசீனர்கள் முன்பு சைக்கிளைத்தான் பாவித்தூர்கள். துரிதயாரிப்புகள் அவரசஉலகம் என்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவைகளால் அவதிப்படுவது அடிமட்ட மக்களே. நந்தா! நான் நேரடியாகத்தான் கேட்கிறேன் குசும்புக்குப் பதில் சொல்லாமல் உண்மையைச் சொல்லுங்கள். சீனா இன்று (அன்றல்ல) தொழிலாளர்களை சரியாத்தான் நடத்துகிறதா? அரசபீடத்தில் இருப்பவர்கள் சர்வாதிகாரிகளாக நடக்கிறார்களா இல்லை? பேச்சுரிமை எழுத்துரிமை அங்கு உண்டா? நான் மாவே மாக்ஸ்கை இடித்துரைக்க வில்லை. இவர்களின் கருப்பொருளான தொழிலாளர் நலன் முழுமையாகக் காக்கப்படுகிறதா?
palli
//சீனாவுக்கு உள்ள சமாதானம் பற்றிய அக்கறையே என்பது பல்லிக்கு புரியவில்லை!//
உன்மைதான் இலங்கை பிரச்சனையில் சீனாவின் சமாதானத்தை பல்லியும் பலரை போல் வேடிக்கை பார்த்தேன், இன்று இந்திய வெளியுறவு அமைச்சரின் செய்தி சீனா இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவது நல்லதல்ல, இதை ஓபாமா இந்திய வருகையின் போது பேசபடும் என; ஆக இரு உங்க கமினிஸ் நாடுகளை சமாதானபடுத்த ஒரு வல்லரசு தேவைபடுகிறது; இதைதான் நான் அடிக்கடி சொல்வேன் துப்புங்க ஆனால் மல்லாக்க படுத்து துப்ப வேண்டாமே,
மருது
பல்லி- நீங்கள் எதைத்தான் சொன்னாலும் சீனவிசமேறி இருப்பவர்கள் விதண்டாவாதத்துக்காகவோ பொழுது போக்குக்காவோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சோசலிசச் சோம்பேறிகளைப்பற்றி பக்கம் பக்கமாய் எழுதியும் சந்திரன் நந்தாவுக்கு விளங்காது. இவர்கள் மட்டும் ஐரொப்பா கனடாவில் வசதியாக இருக்க வேணும். சீனமக்கள் மாவோயிசம் என்று அடிமைகளிலும் கேவலமாக நடத்தப்படவேண்டும். இவர்கள் மனிதவிசுவாசிகள் இன்றைய சீனா முதலாளி என்றால் கூட மன்னிக்கலாம். கேவலங்கெட்ட போக்கிலித்தனமான சர்வாதிகாரி. எந்த அயல்நாடு சீனனுக்குப் பயமின்றி இருக்கிறது. சீனா தன்மக்களைச் சரியாகச் சுதந்தரமாக நடத்துகிறது என்று விட்டுக் கொடுக்காமல் கதைப்பவர்கள் எப்பத்தான் மனிதம் மனிதநேயம் பற்றிப் பேசுகிறார்களோ தெரியவில்லை. முசுப்பாத்தி என்ன வென்றால் நாங்கள் மற்றவர்கள் முதலாலித்துவ ஊடகச்செய்திகளை நம்புகிறோம். இவர்கள் ஏதோ சீனா அல்லது சோசலிசநாடுகளில் வாழ்ந்து பழமும் திண்டு கொட்டையும் போட்டவர்கள் மாதிரி கதைகள் வேறு. சும்மா தாழிக்கிறார்கள்.
நந்தா
சீனா இந்தியாவின் உள்னாட்டுப் பிரச்சனையில் தலயிடுகிறதா? அமெரிக்கா வந்து சமாதானம் பண்ணப் போகிறதா?
சீனத்தின் உள்னாட்டுப் பிரச்சனையில் இந்தியா 1959 ஆம் ஆண்டு தலையிட்டு வாங்கி கட்டிக் கொண்ட கதை பல்லிக்குத் தெரியாது.
திபெத்தில் வைக்கப்பட்ட அமெரிக்க உளவு கருவிகள் இந்தியாவின் உதவியுடன் வைக்கப்பட்டவை என்பதும் அதனால் இந்தியா சீனாவுடன் எதிரியாக்கப்பட்டதும் வரலாறு.
எல்லைப் பிரச்சனைக்கு அமெரிக்காவுடன் பேசி இந்தியா சாதிக்க எதுவும் கிடையாது. ஆனால் அமெரிக்காவுக்கு ஆயுதங்களை வாங்கி லாபம் காட்டலாம்!
PALLI
சீனத்தின் உள்னாட்டுப் பிரச்சனையில் இந்தியா 1959 ஆம் ஆண்டு தலையிட்டு வாங்கி கட்டிக் கொண்ட கதை பல்லிக்குத் தெரியாது.::///
உன்மைதான் எனக்கு தெரியாது;நேரம் கிடைக்கும்போது அதை கட்டுரையாய் எழுதுங்கள் என்னைபோல் பலர் அறிய வாய்ப்பாய் இருக்கும்; ஆனால் நந்தா இங்கு வாதம் சீனா நல்லதா இந்தியா நல்லதா அல்ல, சீன கமினிஸ்;;;; காரரின் வல்லரசுதனமே, அதைதான் குசும்பு சொல்லுகிக்றார்; சீனா தவறு செய்கிறதா இல்லையென நாம் கேட்டால் இந்தியாவும் தவறு செய்தது என ஒரு கருவை குசும்புவுக்கு நீங்கள் தந்து உதவுகிறீர்கள்.
நந்தா
சீனத்தின் கம்யூனிச அரசியலோ இந்தியாவின் பாராளுமன்ற அரசியலோ இலங்கையில் “ஈழம்” என்று தமிழர்களின் தலையில் உள்ளி அரைத்தவர்களின் பிரச்சனைகள் அல்ல.
யாழ்ப்பாணத்து மக்களின் அரசியல் பிரச்சனைகள் அல்லது சமூக பிரச்சனைகள் பற்றி எந்த அறிவுமில்லாத வேலைவெட்டி இல்லாத கும்பலகள் “வெளினாட்டு” காசைக் கண்டதும் அவர்களின் ஆணைப்படி தமிழர்களின் குரல் வளைகளைத் திருகப் புறப்பட்டவர்கள். “தமிழ்” என்று தமிழர்களை கொள்ளையடித்தும் கொலை செய்தும் அந்த “வெளி”நாட்டு எசமான் களுக்கு ஆதாயம் காட்டியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து கொண்டு “வங்கம் தந்த பாடம்” எழுதிய அரசியல் வித்தகர்கள். இந்தியாவின் படைகளைத் தோற்கடித்துவிட்டதாக உலகமெங்கும் புழுகி தமிழர்களிடம் கொள்ளையடித்தவர்கள்.
இலங்கைத் தமிழர்களின் அரசியலை விட தமிழர்களிடம் கொள்ளையடிப்பது தங்களின் உற்றார் உறவினர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு “அடித்த” பணத்தை உபயோகித்ததும்தான் இந்த தமிழ் வித்தகர்களின் வரலாறு!
செல்வனாயகம் பிரபாகரன் கும்பல் “யு என் பி” கும்பலோடு கும்மாளமடித்தவர்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுகுத் “தமிழ்” பிரச்சனை கிடையாது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்ததும் உடனடியாகவே இந்த இலங்கைத் தமிழ் கோமாளிகளுக்கு “தமிழ்” பற்றும் பிரச்சனைகளும் ஞாபகம் வந்துவிடும்!
தமிழர்களை வந்தேறு குடிகள் என்று வர்ணித்த பொன்சேகாவுக்கு வாக்களிப்பது வரை சென்று தங்கள் அமெரிக்க விசுவாசத்தை காட்டியவர்கள். அதனைத் தவிர பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்பதன் மூலம் எதனைச் சாதிக்க முற்பட்டார்கள்?
சீனத் தூதரகத்தைத் தாக்குமளவிற்கு இவர்களுக்கு அமெரிக்க எசமான் விசுவாசம் கொந்தளித்துள்ளது.
கூலிப்படைகளாக இருந்து முதலாளித்துவத்துக்கு சேவை செய்தால் “தங்களுக்கு” சகல செளபாக்கியங்களும் கிடைக்க வழி இருக்கிறது என்றுநம்பும் கும்பல்கள் சீனா பற்றி கதைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.
சீன கம்யூனிஸ்ட்டுக்கள்தான் சீனாவை வழிநடத்துகிறார்கள். சீன மக்களின் உழைப்பை இன்று ஒரு மாபெரும் சக்தியாக வல்லரசு அந்தஸ்த்துக்கு உயர்த்தியவர்களும் அவர்களே. அவர்களின் சிந்தனைகள் இலங்கை மக்களுக்கு எந்தக் காலத்திலும் பாதகமாக இருந்தது கிடையாது.
Kusumpu
நந்தா /சீனத்தின் கம்யூனிச அரசியலோ இந்தியாவின் பாராளுமன்ற அரசியலோ இலங்கையில் “ஈழம்” என்று தமிழர்களின் தலையில் உள்ளி அரைத்தவர்களின் பிரச்சனைகள் அல்ல.
யாழ்ப்பாணத்து மக்களின் அரசியல் பிரச்சனைகள் அல்லது சமூக பிரச்சனைகள் பற்றி எந்த அறிவுமில்லாத வேலைவெட்டி இல்லாத கும்பலகள் “வெளினாட்டு” காசைக் கண்டதும் அவர்களின் ஆணைப்படி தமிழர்களின் குரல் வளைகளைத் திருகப் புறப்பட்டவர்கள். “தமிழ்” என்று தமிழர்களை கொள்ளையடித்தும் கொலை செய்தும் அந்த “வெளி”நாட்டு எசமான் களுக்கு ஆதாயம் காட்டியுள்ளனர்.
/ இந்த இராஜதந்திரம் பேசுபவர்களுக்கு இது என்ன என்பது தெரிவதில்லை. சும்மா அரசியலுக்கு வாயில் வந்ததைச் சொல்லிக் கும்மாளம் அடித்தே எல்லாத்தையும் வாக்கு வங்கிகளுக்காகப் போட்டடித்தனர் சகல அரசியல்வாதிகளும்: நாம் எதை எந்த நம்மையை எமது மக்களுக்காகச் செய்யப்போகிறோமோ அதை மனதில் வைத்துக்கொண்டு இணைத்தோ அணைத்தோ எமதுகாரியத்தை வெல்லது இராஜதந்திரம். எமதுநாட்டு அரசியலில் எல்லாம் அரசியல் கூத்தாகவே அமைந்தது. அதில் அடிபட்டுப்போனவர்கள் தனியத் தமிழ்மக்கள் மட்டுமல்ல அப்பாவி ஏழை தொழிலாளர்களும் என்பதை யாரும் மறக்கக் கூடாது.
chandran .raja
தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் எதை யாத்தர்த்துககு கொண்டுவர முடியும் என்பதை தயவு செய்து விளம்புங்கள். முதலாளி இருந்தால் தானே தொழிலாளி இருக்க முடியும் என்ற தாங்கள். எப்படி அப்பாவி தொழிலாழர்களில் கருசரணை ஏற்பட்டது? எமக்கு கிடைத்த அரசியல்தஞ்சம் ஆண்டவன்கருணையால் ஏற்பட்டது என்றல்லவா? உங்கள் எழுத்துக்கள் அர்த்தப் படுத்துகிறது. விரும்பினால் பதில் சொல்லவும்.
palli
//தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் எதை யாத்தர்த்துககு கொண்டுவர முடியும் என்பதை தயவு செய்து விளம்புங்கள். //
சந்திரா நீங்கள் தொழிலாளர் யார்? முதலாளியார் என்பதை தெளிவு படுத்துங்கள். காரணம் குசும்பு சொல்லுகிறார் 98 வீதம் தொழிலாளர்தான் என, அப்படியாயின் அந்த இரண்டுவீத முதலாளியுடன் தான் எங்கள் புடுங்குபாடா?? எமது பார்வையிலும் உங்கள் பார்வையிலும் இந்த தொழிலாளர் யார் என்பதில் சில கருத்து முரன்பாடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்; இதுக்கான விபரம் தெரியும்போதே எமது நிலைபாடான எதார்த்த நிலை பற்றி நாம் சொல்லமுடியும்; எனது கருத்தின்படி அல்லது எனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்வதானால் (இது தவறாக கூட இருக்கலாம்) எனது தாத்தா ஒரு அடிமை தொழிலாளி, எனது அப்பா ஒரு ஏழை தொழிலாளி, நான் ஒரு தொழிலாளி; எனது குழந்தை கண்டிப்பாக ஒரு வசதியான தொழிலாளியாக இருக்கும் என்பது எனது கனவு; அதுக்கான வசதி எனக்கு இருப்பதால் அந்த இலக்கை நோக்கியே எனது பிள்ளைகளை நான் வழிநடத்துகிறேன், இதுக்கு எனக்கு உதவியாக இருப்பது எனது தாத்தா, அப்பாவின வாழ்வுமுறையும் என் வாழ்வின் மாற்றமுமே; இதுவே நான் எதிர்பார்க்கும் அல்லது எதிர்கொள்ளும் யதார்த்தம்; இது ஒரு பெரிய கற்பனை அல்ல என்பதால் இது சாத்தியபடும் என்பதே என் நம்பிக்கை; இந்த மாற்றம் எமது நாட்டின் மாற்றமாகவோ அல்லது தொழிலாளர் மாற்றமாகவோ உருவாகாதோ என்பதே என் கேள்வி;
Kusumpu
//முதலாளி இருந்தால் தானே தொழிலாளி இருக்க முடியும் என்ற தாங்கள். எப்படி அப்பாவி தொழிலாழர்களில் கருசரணை ஏற்பட்டது?//சந்திரன்- எனக்கு ஒன்று துப்பரவாக விளங்கவில்லை. நீங்களும் புலிகளைப்போலவே கதைக்கிறீர்கள். ஒன்றில் அது அல்லது இது. அதாவது வளர்ந்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை என்ற கணக்காக இருக்கிறது. யான் எங்காவது தொழிலாளர் விரோதி என்றேனா? நானே ஒரு தொழிலாளி. என்மேல் எனக்குக் கருசனை ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்?
நந்தா!
/இந்தியாவில் இருந்து கொண்டு “வங்கம் தந்த பாடம்” எழுதிய அரசியல் வித்தகர்கள். இந்தியாவின் படைகளைத் தோற்கடித்துவிட்டதாக உலகமெங்கும் புழுகி தமிழர்களிடம் கொள்ளையடித்தவர்கள்/ இது யார் என்று சொல்வீர்களா? இதை யார் எப்போது எழுதினார் என்ற விபரம் அறிய ஆவல். முக்கியமாக இது எனக்குத் தேவை.
நான் முன்பு குறிப்பிட்டதுபோல் தேர்தலுக்காகத் தேர்ந்தேடுத்து தமிழீஈழக்கோரிக்கைக் கோரிக்கையின் பின்புலத்தில் இராஜதந்திரம் என்ற ஒன்று இருக்கவில்லை. புலியியல் ரீதியான தெழிவோ: போராட்டம் பற்றி அறிவோ இன்றி எடுத்த முடிவுக்குப் பலியானது பொதுமக்கள் மட்டுமல்ல வளர்த்துவிட்டவர்களும் முழு இலங்கையும்தான். அரசியல்வாதிகள் முன்யோசனையோடு அவதானமாக எமதுமக்களின் எதிர்காலத்தை அன்றும் சிந்திக்கவில்லை. இன்றும் சிந்திக்கவில்லை. முக்கியமாக ஒருசிறுபான்மை இன அரசியல்வாதி ஐ.தே.கட்சியுடன் நிற்க இயலாது. காரணம் கொள்கை கோட்பாடு வழிமுறை.
Kusumpu
/சந்திரா நீங்கள் தொழிலாளர் யார்? முதலாளியார் என்பதை தெளிவு படுத்துங்கள். காரணம் குசும்பு சொல்லுகிறார் 98 வீதம் தொழிலாளர்தான் எனஇ அப்படியாயின் அந்த இரண்டுவீத முதலாளியுடன் தான் எங்கள் புடுங்குபாடா?? // இதற்கு யாரும் பதில் சொல்லத்தயாராக இல்லை. உலகசனத்தொகையில் பெரும்பான்மை தொழிலாளர்கள் என்பதை யாராவது மறுத்துரைக்க முடியுமா? 98சதவீதம் சரியானதோ இல்லையோ குறைந்தது 90சதவீதமான மக்கள் தொழிலாளர்களே. சரியான தமிழ்படி பார்த்தால் முதலை ஆள்பவன் முதலாளி. அந்த முதலைவைத்து மற்றைய மனிதர்களை ஆழ்பவனே முதலாளி. ஒரு தொழிலாளி வியர்வைசிந்திச் சேர்த்துவைத்திருக்கும் பணத்தைக் கொண்டு அவனையும் முதலாளி என்று கூறலாமா என்று கேட்கக்கூடாது. எனது சொந்தக்கருத்துப்படி மற்றவர்களை மதியாது தான் தனது கருத்து மட்டுமே சரி எனக்கொண்டவர்களும் முதலாளித்துவ எண்ணம் கொண்டவர்களே. உதாரணம் நந்தா
chandran .raja
எமது கருத்துக்கள் ஒரு சிலரை மதியாது மட்டுமல்ல வரலாற்று-விஞ்யாணத்திற்கு எதிரான இவர்களை இந்த உலக-அரங்கிலிருந்து தூக்கியெறியவே பாடுபடும். இங்கு முதலாளி- மூலதனம் என்று குறிப்பிடும் பொழுது அது அரசியலை கட்டுப்படுத்துவதை தனது ஆதிக்கத்துக்குள் வைத்துக் கொள்வதையே குறிப்பிடுகிறோம். இரண்டு வீதமோ அல்லது பத்தில் ஒன்பது பேர் உழைப்பாளிகள் தான் என்பதில் தாங்கள் முடிவுக்கு வந்ததில் அளப்பரிய மகிழ்ச்சியே! முதலாளிக்கும்-தொழிலாளிக்கும் உள்ள உறவு சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் இடையே உள்ள உறவு. இது போராட்டத்தின் ஊடாகவே இதை வெளிக்கொண்டு வரமுடியும். அதற்கான காலம் தானே கனிந்திருக்கிறது.
Kusumpu
சந்திரன் உங்களை யாரும் குறிப்பிடவில்லை. நானும் பல்லியும் கேட்ட கேள்விக்கு வரிக்கு வரி தொழிலாளி முதலாளி என்று எழுதிய எவருமே முதலாளி தொழிலாளி யார்: வரவு இலக்கணம் என்ன. வித்தியாசம் என்ன எப்பவற்றை எழுதாமல் தொழிலாளி முதலாளி என்று எழுதுவதில் பிரயோசனம் இல்லை. என் சிற்றறிவுக்குத் தெரிந்த வரைவு இலக்கணத்தை நான் எழுதினேன். மாக்சிகத்தைக் கரைத்துக் குடித்தவார்களால் நாம் கேட்ட கேள்விக்கு பதில் எழுத முடியவில்லை. மாக்ஸ் மீண்டும் தற்கொலை செய்ய அல்லவா போகிறார்.
/போராட்டத்தின் ஊடாகவே இதை வெளிக்கொண்டு வரமுடியும். அதற்கான காலம் தானே கனிந்திருக்கிறது/ சந்திரன்- நாங்கள் 30வருடமாய் கொடுத்த களப்பலிகள் போதும். மக்கள் தாங்கமாட்டார்கள். எமது மக்களை விட்டுவிட்டு நீங்கள் உலகமக்கள் உலகில் யாராவது தொழிலாளர்களை இணைத்துப் போராடுங்கள். இலங்கையில் தமிழர்களை ஏன் சிங்களவரையும் முதலில் சாப்பிடவிடுங்கள். உங்களின் போராட்டங்கள் போதும்.பூமி தாங்காது.
palli
// நானே ஒரு தொழிலாளி. என்மேல் எனக்குக் கருசனை ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்?//
இதுவே பல்லியின் நிலையும்; சந்திரா பாரிஸ்சில் சில தினங்களாக நடக்கும் தொழிலாளர் போராட்டம் தோல்வியில் முடியபோகுதென அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன; காரணம் தொழிலாளர் போராட்டம் வன்முறையில் இறங்கியதால் தொழிலாளரில் மிக குறைவானவர்களே போராட்டத்தை தொடர்கின்றனர்; மிகுதிமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டதாக சொல்லுகிறார்கள் ? மக்களுக்கு இடையூறு தரும் எந்த போராட்டமும் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதுக்கு இன்ற கால கட்டத்தில் பாரிஸ் தொழிலாளர் போராட்டம் ஒரு எடுத்து காட்டு; பாரிஸ் போராட்டத்தை பற்றிய பதிவை சந்திரா தரவும்;
Kusumpu
/மக்களுக்கு இடையூறு தரும் எந்த போராட்டமும் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதுக்கு இன்ற கால கட்டத்தில் பாரிஸ் தொழிலாளர் போராட்டம் ஒரு எடுத்து காட்டு/ பல்லி- இதுதான் உண்மை. மக்கள் போராட்டம் மக்களால் மக்களுக்கு நடத்தப்படவேண்டம். மக்களுக்கு அது இடையூறாக இருக்கிறது என்றால் அது மக்கள் போரட்டமே அல்ல. அது மக்கள் விரும்பா குழுப்போராட்டங்களே. விபரமாகச் சொல்லில் எமதுநாட்டில் நடந்த இயக்கப் போராட்டங்கள். இன்னும் விபரமாய் சொன்னால் மாவியாப் போராட்டங்களே. அடியெடுத்துத் தந்ததற்கு நன்றி பல்லி