யாழ். மாவட்டத்தில் வெள்ள அபாயங்களைத் தடுப்பதற்கு யாழ். அரசஅதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஏதிர்வரும் மாதங்களில் கடும்மழை பெய்ய விருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையிடுமாறு அவர் பிரதேசச் செயலர்களை பணித்துள்ளார்.
வெள்ள பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற கிராமசேவையாளர் பிரிவு, கிராமம், அவற்றின் சனத்தொகை, மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டால் அவர்களைத் தங்க வைக்க வேண்டிய இடங்கள், அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய வசதிகள் என்பன குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு அறிக்கைகள் தயாரிக்குமாறு அரசாங்க அதிபரால் கோரப்பட்டுள்ளது.