யாழ்.கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் தேடப்படுகின்றன!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதான தகவலையடுத்து அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வியங்காடு சந்திரசேகரர் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றிற்குள் ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட குளம் அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குளத்தின் நீர் படையினரால் பத்து நீரிறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு இறைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Hira
    Hira

    இனிமேல் வெளிநாட்டில் உள்ளவர்கள் செலவு செய்யத் தேவையில்லை. ஊரில் உள்ள குளங்களை திருத்த இராணுவத்திடம் ஆயுதம் இருக்கு என்று சொல்லிவிட்டால்போதும். குளத்தை இறைத்து சேறும் எடுத்தும் விடுவார்கள் நல்ல வழிவகைகள் பிறந்துள்ளது போல் தெரிகிறது.

    Reply
  • Kumar
    Kumar

    யாராவது ஒருவர் சித்திரவதை தாங்காமல் நிலாவரைக் கிணறுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டிருக்கென்று சொல்லிவிடப் போகிறார்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    அது கல்வியங்காடு அல்ல. நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குளம்!

    Reply